உருசியாவின் முதலாம் பேதுரு
உருசியப் பேரரசு / From Wikipedia, the free encyclopedia
முதலாம் பேதுரு அல்லது பியோத்தர் அலெக்சியேவிச் ரொமானோவ் அல்லது முதலாம் பியோத்தர் (ரஷ்ய மொழியில்: Пётр Алексе́евич Рома́нов, Пётр I, அல்லது Пётр Вели́кий, அல்லது பியோட்டர் வெலிகிய்; (9 ஜூன் [யூ.நா. 30 மே ] 1672 முதல் பெப்ரவரி 8 [யூ.நா. ஜனவரி 28] 1725)[1] இறக்கும்வரை ரஷ்யாவையும் பின்னர் ரஷ்யப் பேரரசையும் ஆண்டவர். 1696ஆம் ஆண்டிற்கு முன் இவர் தனது தந்தையின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவரும் நோய் வாய்ப்பட்டவருமான சகோதரர் ஐந்தாம் இவானுடன் கூட்டாக ஆட்சி நடத்தினார். பீட்டர் ரஷ்யாவை மேற்கத்திய மயமாக்கும் கொள்கையையும், நாட்டை விரிவாக்கும் கொள்கையையும் கடைப்பிடித்து வந்தார். இக் கொள்கை ரஷ்யச் சாரகத்தை (Tsardom) 3 பில்லியன் ஏக்கர் பரப்பளவு கொண்டதும் ஐரோப்பாவின் முக்கிய வல்லரசுமான ரஷ்யப் பேரரசாக மாற்றியது. இவர் 17 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அரசராகக் கணிக்கப்படுவதுடன், சீனத்துச் சிங் பேரரசின் பேரரசர் காங்சி, பிரான்சின் பதினான்காம் லூயிஸ் ஆகியோருக்குச் சமமாக வைத்து எண்ணப்படுகிறார்.
ரஷ்யாவின் முதலாம் பேதுரு | |
---|---|
பேரரசரும் சர்வாதிகாரியும் எஸ்தோனியாவினதும் லிவோனியாவினதும் டியூக் | |
ஆட்சிக்காலம் | மே 7, 1682 - பெப்ரவரி 8, 1725 |
முடிசூடல் | ஜூன் 25, 1682 |
முன்னிருந்தோர் | ரஷ்யாவின் மூன்றாம் பியோதர் |
பின்வந்தோர் | ரஷ்யாவின் முதலாம் காத்தரீன் |
Consort | இயுடொக்சியா லோபுகினா ரஷ்யாவின் முதலாம் கத்தரீன் மார்த்தா ஸ்கவ்ரோன்ஸ்காயா |
பிள்ளைகள் | |
அலெக்சி பெட்ரோவிச், ரஷ்யாவின் இளவரசர் அலெக்சாண்டர் பெத்ரோவிச் எனும் பெரிய டியூக் அலெக்சாண்டர் பெரிய டியூச்சஸ் ரஷ்யாவின் அன்னா பெத்ரோவ்னா ரஷ்யாவின் எலிசபெத் நத்தாலியா பெத்ரோவ்னா - பெரிய டியூச்சஸ் நத்தாலியா நத்தாலியா பெத்ரோவ்னா (1718-1725) எனப்படும் பெரிய டியூச்சஸ் நத்தாலியா | |
தந்தை | ரஷ்யாவின் அலெக்சிஸ் I |
தாய் | நத்தாலியா நரிஷ்கினா |
பிறப்பு | (1672-06-09)9 சூன் 1672 மாஸ்கோ |
இறப்பு | 8 பெப்ரவரி 1725(1725-02-08) (அகவை 52) |