உடுப்பி
கருநாடக மாநகரம் / From Wikipedia, the free encyclopedia
உடுப்பி (Udupi) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாநகரம் ஆகும். உடுப்பி நகரானது கல்வி, வணிகம், தொழில்துறை போன்றவற்றின் மையமான மங்களூருக்கு வடக்கே 55 கிமீ (34 மைல்) தொலைவிலும், மாநிலத் தலைநகரான பெங்களூருக்கு மேற்கே சாலை வழியாக சுமார் 422 கிமீ (262 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் உடுப்பி, Country ...
உடுப்பி | |
---|---|
மாநகரம் | |
ஆள்கூறுகள்: 13.3389°N 74.7451°E / 13.3389; 74.7451 | |
Country | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | உடுப்பி மாவட்டம் |
நாடாளுமன்ற உறுப்பினர் | கே. சோபா |
சட்டமன்ற உறுப்பினர் | கே. ரகுபதி பட் |
பரப்பளவு | |
• மாநகரம் | 68.23 km2 (26.34 sq mi) |
ஏற்றம் | 27 m (89 ft) |
மக்கள்தொகை | |
• மாநகரம் | 2,15,500 |
• அடர்த்தி | 3,200/km2 (8,200/sq mi) |
• பெருநகர் | 4,36,208 |
மொழிகள் | |
• Administrative | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 576101 – 576108 |
தொலைபேசி குறியீடு | 0820 |
வாகனப் பதிவு | KA-20 |
இணையதளம் | www |
மூடு
இது உடுப்பி மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. மேலும் இது கர்நாடகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. உடுப்பி கர்நாடகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இங்கு பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு உள்ள கிருஷ்ணர் கோயிலுக்காக புகழ்பெற்றது. மேலும் இது கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.[3] இது பிரபலமான உடுப்பி உணவு வகைகளுக்காக இதன் பெயரைக் கொண்டுள்ளது. இது பரசுராம சேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.