84ஆவது அகாதமி விருதுகள்
From Wikipedia, the free encyclopedia
84ஆவது அகாதமி விருதுகள் (ஆங்கில மொழி: 84th Academy Awards) விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS), ஆல் ஒருங்கிணைக்கப்பட்டது, 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு நடத்தப்பட்டது. பிப்ரவரி 26, 2012 அன்று ஹாலிவுட் மற்றும் ஹைலாந்து சென்டர் திரையரங்கம்[a], ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் இல் 17:30 ப.நே.வ / 20:30 கி.நே.வ நடந்தது. நடிகர் பில்லி கிறிசுடல் இவ்விழாவினை ஒன்பதாவது முறையாக நடத்தினார்..[6]
84-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
Official poster | ||||
திகதி | பிப்ரவரி 26, 2012 | |||
இடம் | ஹாலிவுட் மற்றும் ஹைலாந்து சென்டர் திரையரங்கம்[a] ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | பில்லி கிறிசுடல்[1] | |||
முன்னோட்டம் | ஜெஸ் கேகில் நினா கார்சியா டிம் கன் ராபின் ராபர்ட்சு லுயிசு ரோஸ்[2] | |||
தயாரிப்பாளர் | பிரையன் கிரேசர் டான் மிஸ்சர்[3] | |||
இயக்குனர் | டான் மிஸ்சர்[3] | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | த ஆர்ட்டிஸ்ட் | |||
அதிக விருதுகள் | த ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஹியூகோ (5) | |||
அதிக பரிந்துரைகள் | ஹியூகோ (11) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
கால அளவு | 3 மணிநேரம், 13 நிமிடங்கள்[4] | |||
மதிப்பீடுகள் | 39.46 மில்லியன் 23.91% (நீல்சன் மதிப்பீடுகள்)[5] | |||
|
சூன் 14, 2011 அன்று அகாதமி தலைவர் டாம் ஷெராக் 2012 அகாதமி விருதுகலில் ஐந்து முதல் பத்து திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதிற்கு பரிந்துரைக்கப் போவதாக அறிவித்தார். [7][8]
த ஆர்ட்டிஸ்ட் ஐந்து விருதுகளை வென்றது, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், மற்றும் சிறந்த திரைப்படம். 1927 இல் வெளிவந்த விங்ஸ் திரைப்படத்தினை அடுத்து சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஊமைத்திரைப்படம் வென்றது முதல் முறையாகும்.[9][10][11] பிற வெற்றியாளர்களில் - ஹியூகோ ஐந்து விருதுகளை வென்றது, தி ஐயர்ன் லேடி இரண்டு விருதுகளையும், மற்றும் பிகின்னர்சு, தி டிசன்டன்ட்சு, த பேன்டாசுடிக் பிலையிங் புக்சு ஆஃப் மிசுடர். மார்ரிசு லெசுமோர், த கேர்ள் வித் த டிராகன் டாட்டூ, தி ஹெல்ப், மிட்நைட் இன் பாரீசு, தி மப்பெட்சு, ரங்கோ, சேவிங் ஃபேசு, எ செபரேஷன், த ஷோர், மற்றும் அன்டிபீடட் ஒவ்வொன்றும் ஒரு விருதினை வென்றன. ஐக்கிய அமெரிக்காவில் 39 மில்லியன் மக்கள் இவ்விழாவினை தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர்.