வுடி ஆலன்
From Wikipedia, the free encyclopedia
வுடி ஆலன், ஆங்கிலம்: Woody Allen (பிறப்பு: ஆலன் ஸ்டீவர்ட் கொனிக்ஸ்பெர்க்; டிசம்பர் 1, 1935) அமெரிக்காவைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நகைச்சுவையாளர், நாடக ஆசிரியர் மற்றும் இசைவாணர். 50 வருடங்களுக்கு மேலாக இத்துறைகளில் பரவி இருப்பவர்.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
வுடி ஆலன் | |
---|---|
2006 இல் | |
இயற் பெயர் | ஆலன் ஸ்டீவர்ட் கொனிக்ஸ்பெர்க் |
பிறப்பு | திசம்பர் 1, 1935 (1935-12-01) (அகவை 88) நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
நடிப்புக் காலம் | 1950 - இன்றுவரை |
துணைவர் | ஹார்லின் ரோசன் (1954 -1959) லூயிஸே லாஸர் (1966-1970) ஸூன்-யி ப்ரெவின் (1997- நிகழ்காலம்) |
துணைவர் | டையனெ கீடன்(1970-1971) மியா ஃபாரோ(1980-1992) ஸூன்-யி ப்ரெவின்(1992-1997) |
பிள்ளைகள் | ரோனன் ஃபாரோ (மகன்) பேச்சட் டுமெய்ன் ஆலன் (மகள்) மான்சி டியோ ஆலன் (மகள்)[1] |
இணையத்தளம் | www.woodyallen.com |
இவர் 1950களில் நகைச்சுவை எழுத்தாளராக தொலைகாட்சிகளுக்கு நகைச்சுவைகளும் திரைகதைகளையும் எழுதி பின்னர் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளையும் புத்தகமாக வெளியிட்டு உள்ளார். 1960களின் ஆரம்பத்தில் ஆலன் மேடை நகைச்சுவையாளர் ஆனார், வழக்கமான நகைச்சுவைகளை கலைந்து சொட்றொடர்களில் ஜாலம் காட்டினார்..[2] நகைச்சுவையாளராக இவர் தன் நிஜ வாழ்வில் இருந்து வேறுபட்டு; தன்னை பாதுகாப்பற்ற, முக்கியத்துவமற்ற அறிவாளியாக தன்னை உருவகித்து கொண்டார். 2004ல் இவர் காமெடி சென்டரல் எனும் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனத்தால் நூறு நகைச்சுவையாளர்களில் நான்காவதாக வரிசைப்படுத்த பட்டார். அதே ஆண்டு ஒரு இங்கிலாந்து ஆய்வில் இவர் மூன்றாவது சிறந்த நகைச்சுவையாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1960களின் இடைப்பட்ட காலத்தில் ஆலன் திரைப்படங்களை எழுதி, இயக்கி வந்தார். இவை பெரும்பாலும் அமளிகள் மிக்க இன்பியல் திரைபடமாகவே இருந்து வந்தன. 1970களில் ஐரோப்பிய கலை திரைப்படங்களின் தாக்கத்தால் பின்னர் ஆலன் தத்ரூபமான படங்களை இயக்கினார். இவர் எப்போதும் 1960-1970களின் நியூ ஹாலிவுட் வேவ் ஆஃப் பிலிம் மேக்கர்ஸின்] ஒரு பகுதியாகவே குறிப்பிடப்படுகிறார்.[3] ஆலன் தன் திரைப்பட்ங்களில், நகைச்சுவையாளராக தன்னை எவ்வாறு உருவகித்து கொண்டாரோ அவ்வாறே நடித்தும் வந்தார். ஆலன் நடித்த சில சிறந்த திரைப்படங்களாக அண்ணீ ஹால்(1977), மன்ஹாட்டன் (1979), ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்(1986), மற்றும் 'மிட்நைட் இன் பாரிஸ்(2011)' போன்றவற்றை கூறலாம்.
ஆலன் 23 முறை அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு 4 விருதுகளை பெற்றுள்ளார்; அவற்றில், மூன்று சிறந்த மூல திரைக்கதைக்கும், ஒன்று சிறந்த இயக்குநர்க்கும் கொடுக்கபட்டது. வேறு எந்த திரைக்கதை எழுத்தாளர்களை விடவும் அதிக முரை திரைக்கதைக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்ற பெருமை இவரையே சேரும். மேலும் இவர் 9 பிர்டிஷ் அகாடமியின் பாஃப்டா விருதுகளையும் பெற்றுள்ளார். ஆலன் அவ்வபோது மான்ஹாட்டனில் உள்ள சிறிய இடங்களில் கிளாரினெட் எனும் இசைகருவியில் இசை நிகழ்ச்சி நிகழ்த்துவது உண்டு.