லூயிசு சலிவன்
From Wikipedia, the free encyclopedia
லூயிசு சலிவன் எனப் பரவலாக அறியப்படும் லூயிசு என்றி சலிவன் (Louis Henry Sullivan, செப்டெம்பர் 3, 1856 – ஏப்ரல் 14, 1924) ஒரு அமெரிக்கக் கட்டிடக்கலைஞர். இவர் வானளாவியின் தந்தை எனவும்,[1] கட்டிடக்கலையில் நவீனத்துவத்தின் தந்தை எனவும் அறியப்படுகிறார்.[2] இவர் ஒரு செல்வாக்கு மிக்க கட்டிடக்கலைஞர். புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான பிராங்க் லாயிட் ரைட்டுக்கு வழிகாட்டியாக இருந்ததுடன், பிரைரீ குழு என அழைக்கப்பட்ட சிக்காகோவின் கட்டிடக் கலைஞர் குழுவொன்று இவரிடம் இருந்தே தூண்டுதல் பெற்றனர். என்றி ஆப்சன் ரிச்சார்ட்சன், பிராங்க் லாயிட் ரைட் ஆகியோரும் சலிவனும் அமெரிக்கக் கட்டிடக்கலையின் மும்மூர்த்திகள் எனப்படுகின்றனர். இவர் இறந்த பின்னர், 1944 ஆம் ஆண்டில், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் சங்கத்தின் தங்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் லூயிசு என்றி சலிவன், பிறப்பு ...
லூயிசு என்றி சலிவன் | |
---|---|
c.1895 | |
பிறப்பு | செப்டெம்பர் 3, 1856 பொசுட்டன், மசச்சூசெட்சு, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | ஏப்ரல் 14, 1924(1924-04-14) (அகவை 67) சிக்காகோ, இலினாய்சு,ஐக்கிய அமெரிக்கா |
பணி | கட்டிடக்கலைஞர் |
மூடு