மலேசிய மூத்த அமைச்சர்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய மூத்த அமைச்சர் (மலாய்: Menteri Kanan Malaysia; ஆங்கிலம்: Senior Minister of Malaysia மலாய்: منتري کانن مليسيا)) என்பது மார்ச் 2020 முதல் நவம்பர் 2022 வரை மலேசியாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த அரசியல் பதவியாக இருந்தது.
விரைவான உண்மைகள் மலேசிய மூத்த அமைச்சர் Senior Minister of Malaysia Menteri Kanan Malaysia, உறுப்பினர் ...
மலேசிய மூத்த அமைச்சர்
Senior Minister of Malaysia Menteri Kanan Malaysia | |
---|---|
உறுப்பினர் | அமைச்சரவை நாடாளுமன்றம் |
அறிக்கைகள் | நாடாளுமன்றம் |
பரிந்துரையாளர் | பிரதமர் |
நியமிப்பவர் | யாங் டி பெர்துவான் அகோங் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது. பிரதமரைச் சார்ந்தது |
உருவாக்கம் | 10 மார்ச்சு 2020; 4 ஆண்டுகள் முன்னர் (2020-03-10) |
முதலாமவர் | அஸ்மின் அலி இஸ்மாயில் சப்ரி யாகோப் பாடில்லா யூசோப் ராட்சி சிடின் |
இறுதியாக | அஸ்மின் அலி இசாமுடின் உசேன் பாடில்லா யூசோப் ராட்சி சிடின் |
நீக்கப்பட்ட வருடம் | 24 நவம்பர் 2022; 17 மாதங்கள் முன்னர் (2022-11-24) |
இணையதளம் | www |
மூடு
முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் (Muhyiddin Yassin), தன் அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களை நியமிக்கும் வழக்கத்தை மார்ச் 2020-இல் தொடக்கி வைத்தார். அவரின் வாரிசான இஸ்மாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) இந்த நடைமுறையைத் தொடர்ந்து கடைப்பிடித்தார்.
ஆனால் அன்வர் இப்ராகீம் இதைப் பின்பற்றாமல் அவரின் அமைச்சரவையில் (Anwar Ibrahim Cabinet) இரு துணைப் பிரதமர்களை நியமித்து, முகிதீன் யாசின் உருவாக்கிய மூத்த அமைச்சர் பதவியை அகற்றினார்.