மலாக்கா
மலேசிய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
மலாக்கா (ஆங்கிலம்: Malacca; மலாய்: Melaka; சீனம்: 马六甲; ஜாவி: ملاک) மலேசியாவில் உள்ள 13 மாநிலங்களில், மூன்றாவது சிறிய மாநிலம். மலேசியாவில் வரலாற்றுச் சிறப்புகள் பெற்ற மாநிலமாகக் கருதப்படுகிறது.
மலாக்கா | |
---|---|
Malacca | |
குறிக்கோளுரை: ஒற்றுமையே பலம் Bersatu Teguh | |
பண்: "Melaka Maju Jaya" "முன்னேற்றமே வெற்றி!" | |
ஆள்கூறுகள்: 2°12′N 102°15′E | |
தலைநகரம் | மலாக்கா மாநகரம் |
அரசு | |
• ஆளும் கட்சி | பாரிசான் நேசனல் |
• மலாக்கா யாங் டி பெர்துவா | அலி ருஸ்தாம் |
• மலாக்கா முதலமைச்சர் | அப்துல் ரவுப் யூசோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,664 km2 (642 sq mi) |
மக்கள்தொகை (2023)[1] | |
• மொத்தம் | 10,27,500 |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | |
• HDI (2019) | 0.835 (மிக உயர்வு) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 75xxx - 78xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | 06 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
மலாக்கா சுல்தானகம் | 15ஆம் நூற்றாண்டு |
மலாக்காவில் போர்த்துக்கீசிய ஆட்சி | 24 ஆகஸ்டு 1511 |
மலாக்காவில் டச்சு ஆட்சி | 14 சனவரி 1641 |
மலாக்காவில் பிரித்தானியர் ஆட்சி | 17 மார்ச் 1824 |
மலாயாவில் ஜப்பானியர் ஆட்சி | 11 சனவரி 1942 |
மலாய் ஒன்றியத்திற்குள் இணைதல் | 1 ஏப்ரல் 1946 |
மலாயா கூட்டமைப்பில் இணைதல் | 1 பெப்ரவரி 1948 |
மலாயா கூட்டமைப்பின் சுதந்திரம் | 31 ஆகஸ்டு 1957 |
இணையதளம் | http://www.melaka.org.my |
தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியில் உள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகரத்தின் பெயரும் மலாக்கா. யுனெஸ்கோ நிறுவனம், 2008-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி மலாக்காவை உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக அறிவித்தது.[2]
2015-ஆம் ஆண்டின் ’மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகள்’ அறிக்கையின்படி, மலாக்கா மாநிலத்தின் இளைஞர்களின் கல்வியறிவு 99.5 விழுக்காடுஎன அறியப்பட்டு உள்ளது.[3][4]
2017-ஆம் ஆண்டில் மலாக்கா மாநிலத்தின் குற்ற விகிதம் 15.5 விழுக்காடு குறைந்து உள்ளது.[5] தவிர அதே 2017-ஆம் ஆண்டில் குறைந்த வேலையின்மை விகிதத்தை (1.08 விழுக்காடு) இந்த மாநிலம் பதிவு செய்து இருப்பதாக, 2017-ஆம் ஆண்டு மலேசியச் சமூகப் பொருளாதார அறிக்கை வெளியிட்டு உள்ளது.[6]
அண்மைய ஆண்டுகளில், மலாக்கா மாநிலம் பல அனைத்துலக விருதுகளையும் பெற்றுள்ளது. ஆசியாவில் சுற்றுலா செல்லும் இடங்களில் முதன்மை இடங்களில் ஒன்றாக மலாக்கா விளங்குவதாக ’போர்ப்ஸ்’ மற்றும் ’லோன்லி பிளானட்’ வெளியீடுகள் பட்டியலிட்டு உள்ளன. [7][8]
மலாக்கா மாநிலத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளன. மத்திய மலாக்கா, அலோர் காஜா, ஜாசின் எனும் மூன்று மாவட்டங்கள். தென் மேற்கே மலாக்கா நீரிணையும் சுமத்திரா தீவும் இருக்கின்றன. வடக்கே நெகிரி செம்பிலான் மாநிலமும் தெற்கே ஜொகூர் மாநிலமும் உள்ளன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 148 கி.மீ. தொலைவில் மலாக்கா நகரம் அமைந்து உள்ளது.