மத்ரித்
From Wikipedia, the free encyclopedia
மத்ரித் (எசுப்பானியம்: Madrid) எசுப்பானிய நாட்டின் தலைநகரமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது மிகப்பெரிய நரமும் ஆகும் (முதல் இரண்டு இலண்டன் மற்றும் பெர்லின்). மேலும் பெருநகர மண்டல பரப்பளவிலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது இடத்தில் உள்ளது (முதல் இரண்டு இலண்டன் மற்றும் பாரிசு)[3]. நகரின் மொத்த பரப்பளவு 604.3 சதுர கிலோ மீட்டர்கள்[4]. மக்கள் தொகை 3.3 மில்லியன்[5]. பெருநகர மண்டலம் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்த்து 6.5 மில்லியன். மத்ரித் நகரம், மத்ரித் மாகாணத்தின் உள்ள மன்சனரே நதியின் கரையில் அமைதுள்ளது. இந்த மாகாணங்களின் எல்லைகளாக கேசுடைல் லியான் மற்றும் கேசுடிலா மான்சா ஆகிய சுயாட்சி மாகானங்கள் உள்ளன.
மத்ரித் | |
---|---|
Villa de Madrid | |
குறிக்கோளுரை: «Fui sobre agua edificada, mis muros de fuego son. Esta es mi insignia y blasón» ("நீரின் மேல் நான் கட்டப்பட்டேன், எனது சுவர்கள் நெருப்பால் ஆனவை. இது எனது பதாகை மற்றும் கேடயம்") | |
நாடு | எசுப்பானியா |
மாநிலம் | மத்ரித் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | மத்ரித் மாநகராட்சி |
• மாநகராட்சி தலைவர் | அனா பொடெல்லா (எசுப்பானிய மக்கள் கட்சி) |
பரப்பளவு | |
• நகரம் | 605.77 km2 (233.89 sq mi) |
ஏற்றம் | 667 m (2,188 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 32,65,038 |
• தரவரிசை | 1st |
• அடர்த்தி | 5,390/km2 (14,000/sq mi) |
• நகர்ப்புறம் | 60,87,000[1] |
• பெருநகர் | 63,69,162[2] |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
Area code | 34 (எசுப்பானியா) + 91 (மத்ரித்) |
இணையதளம் | www.munimadrid.es |
எசுப்பானியத்தின் தலைநகரம் என்ற முறையில், எசுப்பானிய நாடாளுமன்றம் மற்றும் எசுப்பானிய அரச குடும்பத்தின் இல்லம் ஆகியவை இங்கே அமையப்பட்டிருக்கின்றன. மேலும் எசுப்பானியத்தின் பொருளாதார, கலாச்சார மற்றும் பண்பாட்டு மையமாகவும் மத்ரித் விளங்குகின்றது. பெருநகர மொத்த உற்பத்தியின் படி ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய நகரமாகவும், உலக அளவில் 27வது பெரிய நகரமாகவும் இது இருக்கின்றது[6]. அதிக பொருளாதார வாய்ப்புகள், சிறந்த வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை கொண்டுள்ளதால் இது தென் ஐரோப்பாவின் முதன்மையான பொருளாதார மையமாகவும் விளங்குகின்றது[7][8].
ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் இயங்கும் உலக சுற்றுலாத்துறை அமைப்பின் தலைமைச் செயலகம் இங்கு அமைந்துள்ளது. உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளைப் பெறும் நகரங்கள் வரிசையில் மத்ரித் ஏழாவது இடத்தில் உள்ளது[9]. ஐரோப்பிய அளவில் இதற்கு நான்காவது இடம்[9]. மோனோகில் பத்திரிக்கை 2010ல் மேற்கொண்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி, மக்கள் வாழத்தகுந்த நகரங்களின் அடிப்படையில் பத்தாவது இடத்தை மத்ரித்துக்கு கொடுத்திருந்தது.