மட்டக்களப்பு
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
பிறபயன்பாட்டுக்கு, மட்டக்களப்பு (பக்கவழி நெறிப்படுத்தல்) என்பதைப் பாருங்கள்.
மட்டக்களப்பு (ஆங்கில மொழி: Batticaloa, சிங்களம்: මඩකලපුව) இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாகத் திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன. கொழும்பிலிருந்து இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[3]
விரைவான உண்மைகள் மட்டக்களப்புBatticaloa, நாடு ...
மட்டக்களப்பு Batticaloa | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மட்டுநகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு மாகாணம் |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிரதேச செயலாளர் பிரிவு | மண்முனை வடக்கு |
அரசு | |
• வகை | மட்டக்களப்பு மாநகர சபை |
• நகர முதல்வர் | தியாகராஜா சரவணபவன்[1][2] |
ஏற்றம் | 14 m (45 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 92,332 |
இனம் | மட்டக்களப்பான்/மட்டக்களப்பார் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை நேர வலயம்) |
அஞ்சல் குறியீடு | 30000 |
Area code | 065 |
மூடு