மஞ்சள் தொண்டைக் கொண்டைக் குருவி
ஒரு தென்னிந்தியப் பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
மஞ்சள் தொண்டைக் கொண்டைக் குருவி (yellow-throated bulbul (Pycnonotus xantholaemus) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தைச்சேர்ந்த, பேசரின் பறவை ஆகும். இவை தென்னிந்திய தீபகற்பத்தில் உள்ள அகணிய உயிரியாகும். இவை செங்குத்தான, பாறைக் குன்றுகளின் உச்சியில் வாழக்கூடியன. இவற்றின் வாழிடங்கள் கிரானைட் சுரங்கங்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இந்த உயிரினத்தின் அழைப்புகள் வெண்புருவ கொண்டலாத்தியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. இவற்றின் தோற்றமும் வெண்புருவ கொண்டலாத்திபோல இருந்தாலும் இதை சிலர் வெண்புருவக் கொண்டலாத்தியாக நினைத்துக் குழப்பிக் கொள்வதுண்டு. இதன் தலை, தொண்டை, போன்றவற்றில் உள்ள மஞ்சள் நிறம் இவற்றை வேறுபடுத்துவதாக உள்ளன.
விரைவான உண்மைகள் மஞ்சள் தொண்டைக் கொண்டைக் குருவி, காப்பு நிலை ...
மஞ்சள் தொண்டைக் கொண்டைக் குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பைக்னோனோடசு |
இனம்: | P. xantholaemus |
இருசொற் பெயரீடு | |
Pycnonotus xantholaemus (ஜெர்டன், 1845) | |
வேறு பெயர்கள் | |
மூடு