பைஜ்நாத் கோயில்
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
பைஜ்நாத் கோயில் (Baijnath Temple) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள பைஜ்நாத் என்னும் ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ள நாகரா பாணி இந்துக் கோயில் ஆகும். இது 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி. 1204 ) இரண்டு உள்ளூர் வணிகர்களான அகுகா, மன்யுகா என்பவர்களால் இக்கோயில் கட்டப்பட்டது . இங்கு சிவன் வைத்தியநாதர் என்ற பெயரில் உள்ளார். [1] இன்றைய பைஜ்நாத் கோயில் அமைப்பில் உள்ள கல்வெட்டுகளின்படி, தற்போதைய கோயில் கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பு இங்கு ஒரு சிவன் கோயில் இருந்துள்ளது. கருவறையில் சிவலிங்கம் உள்ளது. மேலும் சுவர்களிலும் வெளிப்புறத்திலும் முக்கிய இடங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
விரைவான உண்மைகள் பைஜ்நாத் கோயில், அமைவிடம் ...
பைஜ்நாத் கோயில் | |
---|---|
இமாச்சலப் பிரதேசத்தில் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம்: | காங்ரா |
ஆள்கூறுகள்: | 32°05′01″N 76°57′59″E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | Nagara style |
வரலாறு | |
அமைத்தவர்: | அகுகா - மன்யுகா |
இணையதளம்: | https://bababaijnath.in/ |
மூடு