பனங்காடை
From Wikipedia, the free encyclopedia
பனங்காடை (Coracias benghalensis) என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும்.[2] இது ஈராக் முதல் தாய்லாந்து வரை காணப்படுகிறது. இப்பறவை நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். திறந்த புல்வெளிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படும். ஆண், பெண் பறவைகளுக்கிடையே தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. கொண்டை, வால், இறக்கைப் பகுதிகள் நீலநிறத்திலும் கழுத்து மற்றும் உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
விரைவான உண்மைகள் பனங்காடை, காப்பு நிலை ...
பனங்காடை | |
---|---|
ரைகாட் மாவட்டத்தில் (மகாராட்டிரம்) ஒரு பனங்காடை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Coraciidae |
பேரினம்: | Coracias |
இனம்: | C. benghalensis |
இருசொற் பெயரீடு | |
Coracias benghalensis (லின்னேயசு, 1758) | |
breeding range non-breeding range | |
வேறு பெயர்கள் | |
Corvus benghalensis |
மூடு
உலகளவில் இந்தியாவிலேயே இவை மிகுந்துள்ளன. சாலையோர மரங்களிலும் மின்கம்பிகள் முதலானவற்றிலும் இவை அமர்ந்திருக்கக் காணலாம்.