தோமினிக் சாவியோ
புனிதர்களில் மிகவும் இளையவர் / From Wikipedia, the free encyclopedia
புனித தோமினிக் சாவியோ (இத்தாலியம்: Domenico Savio; ஏப்ரல் 2, 1842 – மார்ச் 9, 1857[5][6]), இத்தாலியைச் சார்ந்த புனித ஜான் போஸ்கோவின் வளரிளம் பருவ மாணவர்களில் ஒருவர். இவர் குருவாகும் ஆசையில் படித்துக் கொண்டிருந்தபோது தனது 14ஆம் வயதில் நோயுற்று இறந்தார்.[7]
விரைவான உண்மைகள் புனித தோமினிக் சாவியோ, ஒப்புரவாளர் ...
புனித தோமினிக் சாவியோ | |
---|---|
ஒரு செப அட்டையில் புனித தோமினிக் சாவியோ. | |
ஒப்புரவாளர் | |
பிறப்பு | (1842-04-02)ஏப்ரல் 2, 1842 சான் ஜியோவன்னி, ரிவா ப்ரெஸோ சியரி, பைட்மான்ட், இத்தாலி[1] |
இறப்பு | மார்ச்சு 9, 1857(1857-03-09) (அகவை 14) மொன்டொனியோ, பைட்மான்ட், இத்தாலி[1] |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம் |
அருளாளர் பட்டம் | மார்ச் 5, 1950 by திருத்தந்தை 12ம் பயஸ் |
புனிதர் பட்டம் | ஜூன் 12, 1954 by திருத்தந்தை 12ம் பயஸ் |
முக்கிய திருத்தலங்கள் | கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம், தூரின், இத்தாலி[2] |
திருவிழா | மே 6 (முன்பு மார்ச் 9)[3] |
பாதுகாவல் | பீடச்சிறார், பாடகர் குழுச் சிறார், தவறுதலாக குற்றம் சுமத்தப்பட்டோர்[4] |
மூடு
பதினான்கு வயதே நிரம்பிய தோமினிக் சாவியோவின், வீரத்துவம் நிறைந்த அன்றாடப் புண்ணிய வாழ்வே இவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தியது.[8] கத்தோலிக்க திருச்சபையில் மறைசாட்சியாக இறக்காத புனிதர்களில் இவரே மிகவும் இளையவர்.[9]