தைமூரியப் பேரரசு
மத்திய கிழக்கில் தைமூரால் நிறுவப்பட்ட பேரரசு / From Wikipedia, the free encyclopedia
தைமூரியப் பேரரசு என்பது, துருக்க-மங்கோலிய மூலத்தைக் கொண்டவர்களும் பின்னர் பாரசீகராக மாறியவர்களுமான மத்திய ஆசிய சுன்னி முசுலிம் வம்சத்தினரால் நிறுவப்பட்ட பேரரசு ஆகும். இவர்களது பேரரசு மத்திய ஆசியா, ஈரான், இன்றைய ஆப்கானிசுத்தான் மற்றும் பாகிசுத்தான், இந்தியா, மெசொப்பொத்தேமியா, காக்கேசியா ஆகியவற்றில் பெரும்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிப் பரந்து விரிந்திருந்தது. இது புகழ் பெற்ற நாடுபிடிப்பாளரான தைமூரினால் (தாமர்லான்) 14 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.
தைமூரியப் பேரரசு گورکانیان ஈரான்-உ-துரான் | |||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1370–1507 | |||||||||||||||||||||||||||||||||||||||
குறிக்கோள்: பாரசீக மொழி:راستى رستى ரஸ்டி ருஸ்டி "பாவ விமோசனம் என்பது நன்னடத்தையில் உள்ளது" | |||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | அமீரகம் | ||||||||||||||||||||||||||||||||||||||
தலைநகரம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் |
| ||||||||||||||||||||||||||||||||||||||
சமயம் |
| ||||||||||||||||||||||||||||||||||||||
அரசாங்கம் | முற்றிலுமான முடியரசு | ||||||||||||||||||||||||||||||||||||||
அமீர் | |||||||||||||||||||||||||||||||||||||||
• 1370–1405 | தைமூர் (முதல்) | ||||||||||||||||||||||||||||||||||||||
• 1506–1507 | பாதியல் சமான் (கடைசி) | ||||||||||||||||||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய நடுக்காலங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||
1363 | |||||||||||||||||||||||||||||||||||||||
• தைமூரியப் பேரரசு நிறுவப்படுதல் | 1370 | ||||||||||||||||||||||||||||||||||||||
• மேற்கு நோக்கிய விரிவாக்கம் தொடங்குகிறது | 1380 | ||||||||||||||||||||||||||||||||||||||
• அங்காரா யுத்தம் | 20 சூலை 1402 | ||||||||||||||||||||||||||||||||||||||
• சமர்கந்தின் வீழ்ச்சி | 1505 | ||||||||||||||||||||||||||||||||||||||
• ஹெறாத்தின் வீழ்ச்சி | 1507 | ||||||||||||||||||||||||||||||||||||||
• முகலாயப் பேரரசு நிறுவப்படுதல் | 1526 | ||||||||||||||||||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||
1405 மதிப்பீடு.[10][11] | 4,400,000 km2 (1,700,000 sq mi) | ||||||||||||||||||||||||||||||||||||||
நாணயம் | தன்கா | ||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் |
16 ஆம் நூற்றாண்டில், தைமூரிய இளவரசரும் பர்கனாவின் ஆட்சியாளருமாக இருந்த பாபர் இந்தியாமீது படையெடுத்து முகலாயப் பேரரசை உருவாக்கினார். இது, 18 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பேரரசர் ஔரங்கசீப்புக்குப் பின்னர் மங்கத் தொடங்குவதற்கு முன் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்தது. பின்னர் 1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் பிரித்தானிய அரசால் முறையாகக் கலைக்கப்பட்டது. இத்துடன் தைமூரிய வம்சத்தினரின் கடைசி அரசும் இல்லாதொழிந்தது.