சைபுல் முலுக் ஏரி
பாகித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள ஒரு ஏரி / From Wikipedia, the free encyclopedia
சைபுல் முலுக் ஏரி ( Lake Saiful Muluk) சைபுல் முலுக் தேசிய பூங்காவில் உள்ள நரன் நகருக்கு அருகில் ககன் பள்ளத்தாக்கின் வடக்கு முனையில் அமைந்துள்ள ஒரு மலைப்பாங்கான ஏரியாகும். கடல் மட்டத்திலிருந்து 3,224 மீ (10,578 அடி) உயரத்தில், இந்த ஏரி மரங்களின் வரிசைக்கு மேலே அமைந்துள்ளது. இது பாக்கித்தானின் மிக உயரமான ஏரிகளில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் சைபுல் முலுக் ஏரி, அமைவிடம் ...
சைபுல் முலுக் ஏரி | |
---|---|
இந்த ஏரியானது வடக்கு பாக்கித்தானின் மலைகளில் அதன் அழகிய அமைப்பிற்காக குறிப்பிடத்தக்கது | |
அமைவிடம் | சைபுல் முலுக் தேசியப் பூங்கா ககன் பள்ளத்தாக்கு |
ஆள்கூறுகள் | 34.876957°N 73.694485°E / 34.876957; 73.694485 |
ஏரி வகை | அல்பைன், பனிப்பாறை ஏரி |
முதன்மை வரத்து | பனிப்பாறை தண்ணீர் |
வடிநில நாடுகள் | பாக்கித்தான் |
மேற்பரப்பளவு | 2.75 km2 (1.06 sq mi) |
அதிகபட்ச ஆழம் | 113 அடி (34 m) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 3,224 மீட்டர்கள் (10,577 அடி)[1] |
குடியேற்றங்கள் | நரன் |
மூடு