சென்னை மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய சென்னை கட்டுரையைப் பார்க்க.
சென்னை மாவட்டம் (Chennai district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சென்னை ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில்தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், மக்கள்தொகை மிக்க மாவட்டம் ஆகும்.
சென்னை | |
மாவட்டம் | |
மெரீனா கடற்கரை | |
ரிப்பன் கட்டிடம் | |
சென்னை மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | சென்னை |
பகுதி | வட மாவட்டம் |
ஆட்சியர் |
திருமதி. மு. அருணா, இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
- |
மாநகராட்சி | 1 |
வருவாய் கோட்டங்கள் | 3 |
வட்டங்கள் | 16 |
வருவாய் கிராமங்கள் | 122 |
மண்டலம் | 15 |
வார்டு | 200 |
சட்டமன்றத் தொகுதிகள் | 16 |
மக்களவைத் தொகுதிகள் | 3 |
பரப்பளவு | 178 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
46,46,732 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
600 xxx |
தொலைபேசிக் குறியீடு |
044 |
வாகனப் பதிவு |
TN-01யிலிருந்து - TN-14 வரை |
பாலின விகிதம் |
989 பெண் / 1000 ஆண் ♂/♀ |
கல்வியறிவு |
90.18% |
இணையதளம் | chennai |
178 ச.கி.மீ. பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018-இல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஆலந்தூர் வட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், மதுரவாயல் வட்டம், மாதவரம் வட்டம், அம்பத்தூர் வட்டம் மற்றும் திருவொற்றியூர் வட்டங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 ச.கி.மீ. ஆகக் கூடியுள்ளது.[1][2]