சிலிக்கோன்
From Wikipedia, the free encyclopedia
சிலிக்கோன்கள் (Silicones) பாலிசிலாக்சேன்கள் எனவும் அழைக்கப்படும் பலபடிகளாகும்.இவை மீண்டும் மீண்டும் இடம் பெறும் சிலாக்சேன் அலகுகளால் ஆன பலபடி ஆகும். சிலாக்சேனானது அடுத்தடுத்த சிலிக்கான் மற்றும் ஆக்சிசன் அணுக்களால் ஆன சங்கிலித் தொடரானது கார்பன், நீரியம், மற்றும் சில நேரங்களில் இதர தனிமங்களுடன் இணைந்தும் காணப்படும். இவை வெப்பத்தைத் தாங்க வல்ல திரவ நிலையிலோ அல்லது இரப்பர் போன்றோ காணப்படும் சேர்மங்களாகும். இவை ஒட்டும் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், வெப்ப மற்றும் மின் கடத்தாப் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சில் பொதுவான வகைப்பாடுகள் சிலிக்கோன் எண்ணெய், சிலிக்கோன் மசகு, சிலிக்கோன் இரப்பர், சிலிக்கோன் பிசின் மற்றும் சிலிக்கோன் சக்கை ஆகியவை ஆகும்.[1]