சிம்லா
From Wikipedia, the free encyclopedia
சிம்லா (Shimla also known as Simla, the official name until 1972) [10] என்பது வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமுமாகும். 1864 இல், சிம்லா பிரித்தானிய இந்தியாவின் கோடைக்கால தலைநகராக அறிவிக்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகு, இந்த நகரம் கிழக்கு பஞ்சாபின் தலைநகராக மாறியது. பின்னர் இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகராக மாற்றப்பட்டது. இது மாநிலத்தின் முக்கிய வணிக, கலாச்சார, கல்வி மையமாக உள்ளது.
சிம்லா
Simla | |
---|---|
மாநகரம் | |
அடைபெயர்(கள்): மலை அரசி | |
ஆள்கூறுகள்: 31°6′12″N 77°10′20″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சிம்லா |
பெயர்ச்சூட்டு | சிறீ சியாமளா தேவி[1] |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | சிம்லா மாநகராட்சி |
• துணை ஆணையர் | ஆதித்ய நேகி, இஆப[2] |
• நகராட்சி ஆணையர் | ஆஷிஷ் கோலி[3] |
• மேயர் | சத்யா கவுண்டல்[4] |
பரப்பளவு | |
• மாநகரம் | 35.34 km2 (13.64 sq mi) |
ஏற்றம் | 2,276 m (7,467 ft) |
மக்கள்தொகை | |
• மாநகரம் | 1,69,578 |
• தரவரிசை | 1 (in HP) |
• அடர்த்தி | 4,800/km2 (12,000/sq mi) |
• பெருநகர் | 1,71,640 |
மொழிகள் | |
• அதிகாராப்பூர்வமாக | இந்தி[8] |
• அதிகார்பூர்வ துணை மொழி | சமசுகிருதம்,[9] ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 171 001 |
தொலைபேசி குறியீட்டு எண் | 91 177 XXX XXXX |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2 |
வாகனப் பதிவு | HP-03, HP-07, HP-51, HP-52, HP-62, HP-63 |
UN/LOCODE | IN SLV |
காலநிலை | Cwb |
பொழிவு | 1,577 mm (62 அங்) |
Avg. annual temperature | 17 °C (63 °F) |
Avg. summer temperature | 22 °C (72 °F) |
Avg. winter temperature | 6–7 °C (43–45 °F) |
இணையதளம் | hpshimla |
1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயப் படைகள் இப்பகுதியைக் கைப்பற்றியபோது சிறிய குக்கிராமங்கள் உள்ளது பதிவு செய்யப்பட்டது. இமயமலையின் அடர்ந்த காடுகளில் நகரத்தை நிறுவுவதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை ஆங்கிலேயர்களை ஈர்ப்பதாக இருந்தது. கோடைகால தலைநகராக உருவான இங்கு, 1914 ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1945 ஆம் ஆண்டு சிம்லா மாநாடு உட்பட பல முக்கியமான அரசியல் கூட்டங்கள் நடந்தன. விடுதலைக்குப் பிறகு, 28 சமஸ்தானங்களின் ஒருங்கிணைப்பின் தொடர்ச்சியாக 1948 இல் இமாச்சலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகும், நகரம் ஒரு முக்கிய அரசியல் மையமாக இருந்ததன் அடையாளமாக, 1972 ஆம் ஆண்டில் இங்கு மேற்கொள்ளபட்ட சிம்லா ஒப்பந்தம் குறிப்பிடத்தக்கது. இமாச்சல பிரதேச மாநிலம் மறுசீரமைக்கப்பட்ட பிறகு, மஹாசு மாவட்டத்திற்கு சிம்லா என்று பெயரிடப்பட்டது.
சிம்லாவில் பாரம்பரியமான பல கட்டடங்கள் உள்ளன, அவை டுடோர்பெதன் மற்றும் நவ-கோதிக் கட்டிடக்கலைகளில் காலனித்துவ காலத்திலிருந்தே வடிவமைக்கப்பட்டு உருவாக்கபட்டவை. மேலும் இங்கு பல கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன. இங்கு உள்ள காலனித்துவ கால கட்டிடக்கலை, தேவாலயங்கள், கோயில்கள், நகரத்தின் இயற்கை சூழல் போன்றவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. நகர மையத்தின் முக்கியமான இடங்களாக சிறீ அனுமான் ஜக்கு (சிலை) , ஜாகூ கோயில், வைஸ்ரீகல் லாட்ஜ், கிறிஸ்து தேவாலயம், மால் சாலை, தி ரிட்ஜ், அன்னடேல் ஆகியவை உள்ளன. நகர மையத்தின் வடக்குப் புள்ளி ஜாக்கூ, தெற்கே அன்னடேல், கிழக்குப் புள்ளி சஞ்சௌலி, மேற்குப் புள்ளி சோட்டா சிம்லா போன்றவை ஆகும். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை,[11] யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும், மேலும் இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள செங்குத்தான நிலப்பரப்பு காரணமாக, 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எம்டிபி இமயமலை பைக் பந்தயம் சிம்லாவில் நடக்கிறது. மேலும் இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. தெற்காசியாவிலேயே மிகப்பெரிய இயற்கை பனிச்சறுக்கு வளையமும் சிம்லாவில் உள்ளது. சுற்றுலா மையமாக மட்டுமல்லாமல், இந்த நகரம் பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒரு கல்வி மையமாகவும் உள்ளது.