கூப்பரின் புறாவடி
From Wikipedia, the free encyclopedia
கூப்பரின் புறாவடி வட அமெரிக்காவில் காணப்படும் ஓர் நடுத்தர அளவு பருந்து வகைக் கொன்றுண்ணிப் பறவையாகும். இதன் பரம்பல் தென்கனடாவிலிருந்து வட மெக்சிகோ வரை. கொன்றுண்ணிப் பறவைகளில் பொதுவாகக் காணப்படுவது போல இப்பருந்து வகையிலும் ஆணை விட பெண் உருவத்தில் பெரியதாய் இருக்கிறது. மிசிசிப்பி ஆற்றுக்குக் கிழக்கே காணப்படும் புறாவடி மேற்கே காணப்படும் பறவைகளை விட அளவில் பெரியவை. சில சமயங்களில் அவை இரண்டையும் தனித்தனி உள்ளினமாக சிலர் கருதினாலும் அவற்றின் உருவ அளவைத் தவிர வேறு எந்த வேறுபாடும் இல்லாததால் இப்பறவைக்கு உள்ளினங்கள் எதுவும் இல்லை. இதனை கோழிப் பருந்து, பெரிய புறாப் பருந்து போன்று பல்வேறு பெயர்களால் மக்கள் அழைக்கிறார்கள்.
விரைவான உண்மைகள் கூப்பரின் புறாவடி, காப்பு நிலை ...
கூப்பரின் புறாவடி | |
---|---|
கூப்பரின் புறாவடி, Cooper's Hawk | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Accipitridae |
பேரினம்: | |
இனம்: | A. cooperii |
இருசொற் பெயரீடு | |
Accipiter cooperii (Bonaparte, 1828) | |
மூடு