குளோரியா சுவான்சன்
கோல்டன் குலோப் , அகாதமி விருதுபெற்ற (1899–1983) / From Wikipedia, the free encyclopedia
குளோரியா மே ஜோசபின் சுவான்சன் (Gloria May Josephine Swanson மார்ச் 27, 1899 – ஏப்ரல் 4, 1983) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஊமைப்பட காலத்தில் மிகப் பரவலாக அறியப்பட்ட ஹாலிவுட் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் சன்செட் போல்வர்ட் திரைப்படத்தில் நோர்மா டெஸ்மாண்ட் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக அகாடமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். கோல்டன் குளோப் விருது வென்றார்.
குளோரியா சுவான்சன் | |
---|---|
1922 இல் சுவான்சன் | |
பிறப்பு | குளோரியா மே ஜோசபின் சுவான்சன்[1] (1899-03-27)மார்ச்சு 27, 1899 சிகாகோ, இலினொய், |
இறப்பு | ஏப்ரல் 4, 1983(1983-04-04) (அகவை 84) நியூயார்க்கு நகரம், |
கல்லறை | சர்ச் ஆஃப் ஹெவன்லி நியூயார்க்கு நகரம் |
மற்ற பெயர்கள் | குளோரியா மே |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1914–1983 |
உயரம் | 4 அடி 11 அங் (1.50 m) |
பிள்ளைகள் | 3 |
ஊமைப்பட காலங்களில் இவர் நடிகையாகவும் விளம்பர வடிவழகியாகவும் புகழ்பெற்றார். 1920 ஆம் ஆண்டுகாலங்களில் இவர் நடித்த திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[2]
சுவான்சன் பத்திற்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் நடிகை இவர் ஆவார்.இவர் படங்களில் நடித்தது மட்டுமன்றி தான் நடித்த சில படங்களைத் தயாரித்துள்ளார். 1927 ஆம் ஆண்டில் வெளியான தெ லவ் ஆஃப் சன்யா மற்றும் 1928 ஆம் ஆண்டில் வெளியான சடி தாம்சன் ஆகியன குறிப்பிடத்தகுந்தன ஆகும்.