குளம்பிகள்
கல்களில் குளம்பு உள்ள விலங்கினங்கள் / From Wikipedia, the free encyclopedia
ParaHoxozoa
Ungulate புதைப்படிவ காலம்:Paleocene-Recent, Possible Late Cretaceous-Present | |
---|---|
கழுதை (விலங்கு), Equus africanus | |
எசுப்பானிய மலையாடு (Capra pyrenaica) | |
உயிரியல் வகைப்பாடு | |
தொகுதி: | |
வகுப்பு: | |
உயிரிக்கிளை: | Ferungulata |
உயிரிக்கிளை: | Ungulata
கரோலஸ் லின்னேயஸ், 1766 |
Orders and Clades | |
|
குளம்புள்ள விலங்குகள், அங்குலேட்டா (விலங்கியல்:Ungulata, ஆங்கிலம்:Hoofed animals) குளம்புள்ள விலங்கினமான இவை, பாலூட்டி விலங்குகளிலே குதிரைச் சாதியைச் சேர்ந்த இனங்களாகிய குதிரை, கழுதை, வரிக்குதிரை ஆகியவையும், டாப்பிர் என்னும் நீர் யானையும், காண்டாமிருகமும் ஆகிய ஒற்றைக் குளம்புள்ள பாலூட்டிகளும் ஹிப்போப்பாட்டமஸ் என்னும் நீர்க் குதிரையும், பன்றியும், பெக்காரி என்னும் பன்றி போன்ற அமெரிக்க விலங்கும், ஒட்டகமும், லாமாவும், குறும்பன்றியும், மானும், ஒட்டகச் சிவிங்கியும், ஆடும், மாடும் ஆகிய இரட்டைக் குளம்புள்ள பாலூட்டிகளும் அடங்கும். முன்பு யானை, ஹைராக்ஸ் என்னும் பிராணிகளையும் அங்குலேட்டா என்றே சேர்த்திருந்தனர். இவற்றிலே விரல் நுனி முழுவதையும் மூடிக்கொண்டிருக்கும் மெய்யான குளம்பு இருப்பதில்லை. விரலின் மேற்புறத்தில் காணும் அகன்ற நகம்போன்ற உறுப்பே இருக்கிறது.