உனாஸ்
From Wikipedia, the free encyclopedia
உனாஸ் (Unas) பண்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் இறுதி மன்னர் ஆவார். உனாஸ் எகிப்தை ஏறத்தாழ கிமு 2345 - கிமு 2315 முடிய 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது இறப்பிற்குப் பின்னர் எகிப்தில் ஐந்தாம் வம்ச ஆட்சி முடிவுற்றது. இவருக்குப் பின்னர் ஆறாம் வம்ச மன்னர் தேத்தி எகிப்தின் அரியணை ஏறினார்.
உனாஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Oenas, Onnos, Unis, Wenis | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 24-ஆம் நூற்றாண்டு: 15 - 30 ஆண்டுகள்[lower-alpha 1], எகிப்தின் ஐந்தாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | ஜெத்கரே இசேசி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | தேத்தி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | நெபெத், கெனூத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | ஹெமெத்ரே ஹெமி ♀,கென்ட்கௌஸ் ♀, நெபெருத் ♀, நெபர்கௌஸ் இகு ♀, செஷெசெத் இதூத் ♀. உறுதி செய்ய்யப்படாதோர்: உனாஸ்-அங்க் ♂, இபுத் ♀. யூகிக்கப்பட்டவர்கள்: நெப்கௌஹோர் ♂, செப்செஸ்புப்தா ♂. | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | ஜெத்கரே இசேசி (எனக்கருதப்படுகிறார்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | சேத்திப்போர் (எனக்கருதப்படுகிறார்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | உனாஸ் பிரமிடு |
அவரது தந்தை ஜெத்கரே இசேசிக்குப் பிறகு, எகிப்து பொருளாதார வீழ்ச்சியின் காலகட்டமாக இருந்த போது, ஆட்சி பீடம் ஏறிய உனாசின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவரது ஆட்சியில் எகிப்து லெவண்ட் மற்றும் நுபியாவுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வந்தது. மேலும் தெற்கு காணான் பகுதியில் இராணுவ நடவடிக்கை நடந்திருக்க வாய்ப்பு இருந்தது. மன்னர் உனாஸ் ஆட்சியில் அரசரின் அதிகாரம் குறைந்ததோடு, நோம் நிர்வாகிகளின் அதிகாரமும், வளர்ச்சியும், பரவலாக்கமும் தொடர்ந்தது.
மனன்ர் உனாஸ் தனக்கான பிரமிடுவை சக்காரா நகரத்தில் கட்டினார். உனாசின் பிரமிடு, பழைய இராச்சியத்தின் போது முடிக்கப்பட்ட அரச பிரமிடுகளில் மிகச்சிறியது. 750 மீட்டர் நீளமுள்ள (2,460 அடி) தரைப்பாலத்தால் இணைக்கப்பட்ட அதன் உயரமான மற்றும் பள்ளத்தாக்கு கோயிலுடன சவக்கிடங்கு வளாகம், வர்ணம் பூசப்பட்ட புடைப்புகளால் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டது, அதன் தரம் மற்றும் பல்வேறு வழக்கமான அரச உருவப்படத்தை மிஞ்சும் வகையில் இருந்தது. மேலும் உனாஸ் தனது பிரமிடு அறைகளின் சுவர்களில் பிரமிடு உரைகளை செதுக்கி வர்ணம் பூசினார். பிரமிடு உரைகள் பொறிக்கும் வழக்கம், அவரது வழித்தோன்றல்களால் எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் (கிமு 2160 - 2050) வரை பின்பற்றப்பட்டது. இந்த பிரமிடு உரைகள் மன்னரை இரா மற்றும் ஓரசு கடவுள்களுடன் அடையாளம் காட்டுகின்றன. உனாஸின் காலத்தில் அவரது வழிபாட்டு முறை அதிகரித்து வந்தது. மேலும் மன்னரின் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை அடைய உதவுவதாக கருதப்பட்டது.
உனாசின் மரணத்தின் போது நிகழ்த்தப்பட்ட இறுதி சடங்குகள் பழைய இராச்சியத்தின் இறுதி வரை தொடர்ந்தது. மேலும் குழப்பமான முதல் இடைநிலைக் காலத்தில் தவிர, பிற்கால மத்திய இராச்சிய காலம் வரை (கிமு 2050 - கிமு 1650) இற்ந்தோர் வழிபாட்டு முறை நிலவியதுடன், புத்துயிர் பெற்றது.
அதிகாரப்பூர்வ வழிபாட்டு முறைக்கு இணையாக, மன்னர் உனாஸ் இறந்து கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்குப் பிறகு, பிந்தைய கால எகிப்திய இராச்சியக் காலத்திலும் (கிமு 664 - கிமு 332) சக்காராவின் உள்ளூர் கடவுளாக பிரபலமான வணக்கத்தைப் பெற்றிருக்கிறார்.