இராபர்ட் ஆர். கில்ருத்
From Wikipedia, the free encyclopedia
இராபர்ட் ரோவ் கில்ரூத் (அக்டோபர் 8, 1913 - ஆகஸ்ட் 17, 2000) ஒரு அமெரிக்க விண்வெளிப் பொறியாளர் மற்றும் விமானப் போக்குவரத்து-விண்வெளி முன்னோடி ஆவார், இவர் நாசாவின் மனிதர்கள் கொண்ட விண்வெளி மையத்தின் முதல் இயக்குநராக இருந்தார், பின்னர் இது லிண்டன் பி. ஜான்சன் விண்வெளி மையம் எனப் பெயர் மாற்றப்பட்து. [1]
விரைவான உண்மைகள் இராபர்ட் ஆர். கில்ருத், பிறப்பு ...
இராபர்ட் ஆர். கில்ருத் | |
---|---|
நாசாவில் கில்ருத், 1965 | |
பிறப்பு | இராபர்ட் ரோவ் கில்ரூத் (1913-10-08)அக்டோபர் 8, 1913 நாஷ்வாக், மின்னசொட்டா, U.S. |
இறப்பு | ஆகத்து 17, 2000(2000-08-17) (அகவை 86) சார்லோட்டஸ்வில், வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மின்னசொட்டா பல்கலைக்கழகம், B.S. 1935, M.S. 1936 |
பணி | நாசாவின் இயக்குநர்-மனிதர்கள் கொன்ட விண்வெளி மையம், தற்பொழுது லின்டன் பி, ஜான்சன் விண்வெளி மையம் |
விருதுகள் | சிறப்புமிக்க கூட்டாட்சி குடிமைச் சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது(1962) அமெரிக்கன் சொசைட்டியின் இயந்திரப் பொறியியல் பதக்கம்(1970) |
மூடு
அவர் 1937 முதல் 1958 வரை வானூர்திக்கான தேசிய ஆலோசனைக் குழு (NACA) மற்றும் அதன் மற்றொரு அமைப்பான நாசாவில் 1973 இல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். அவர் அதிமீயொலி வேக விமானம் மற்றும் ஏவுகணை-இயங்கும் விமானம் பற்றிய தொடக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டார், பின்னர் மெர்குரி, ஜெமினி மற்றும் அப்பல்லோ திட்டங்கள் உட்பட அமெரிக்காவின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் ஈடுபட்டார்.