எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
கிபி 1588ஆம் ஆண்டு எசுப்பானிய பேரரசு இங்கிலாந்தின் மீது கடல் வழியாகப் படையெடுத்தது (ஸ்பானிஷ் அர்மாடா, ஆங்கிலம்: Spanish Armada, எசுப்பானியம்: Grande y Felicísima Armada). ஸ்பெயின் அரசர் இரண்டாம் ஃபிலிப்பு, இங்கிலாந்தைக் கைப்பற்றி, அதன் அரசி முதலாம் எலிசபெத்தை அரசணையிலிருந்து இறக்க இந்த படையெடுப்பை மேற்கொண்டார். இங்கிலாந்து கடற்படையை ஆங்கிலக் கால்வாயில் முறியடித்து, பின்னர் தரைப்படைகளை இங்கிலாந்து மண்ணில் தரையிறக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் எஃபிங்காம் பிரபு மற்றும் சர் ஃபிரான்சிஸ் ட்ரேக் தலைமையிலான இங்கிலாந்து கடற்படை ஸ்பானிஷ் கடற்படையைத் தோற்கடித்து விரட்டியதால், ஃபிலிப்பின் திட்டம் தகர்க்கப்பட்டது.
விரைவான உண்மைகள் எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு (கிரேவ்லைன்ஸ் போர்), நாள் ...
எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு (கிரேவ்லைன்ஸ் போர்) | |||||||
---|---|---|---|---|---|---|---|
இங்கிலாந்து-எசுப்பானியா போரின் பகுதி | |||||||
எசுப்பானிய கடற்படையின் தோல்வி (ஓவியர்: பிலிப்-ஜாக் டி லூதர்பர்க்; ஆண்டு: 1797) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இங்கிலாந்து டச்சு ஐக்கிய மாகாணங்கள் | எசுப்பானியா ஸ்பானிஷ் பேரரசு |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
நாட்டிங்காம் பிரபு பிரான்சிஸ் டிரேக் | மெதினா சிதோனியா பிரபு | ||||||
பலம் | |||||||
34 போர்க்கப்பல்கள்[1] 163 ஆயுதம் தாங்கிய வர்த்தகக்கப்பல்கள் [1] 30 வேகப்படகுகள் | 22 காலியன் வகை போர்கப்பல்கள் 108 ஆயுதம் தாங்கிய வர்த்தகக்கப்பல்கள்[2] |
||||||
இழப்புகள் | |||||||
கிரேவ்லைன்ஸ் போர் 50–100 (மாண்டவர்)[3] 400 (காயப்பட்டவர்) 8 தீக்கப்பல்கள்[4] நோய்களால் இழப்பு: 6,000-8,000 (மாண்டவர்) | கிரேவ்லைன்ஸ் போர்: > 600 (மாண்டவர்) 800 (காயப்பட்டவர்)[5] 397 (சிறைபிடிக்கப்பட்டவர்) 2 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன புயல்/நோய்களால் இழப்பு: 51 கப்பல்கள் சேதமடைந்தன 10 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன[6] 20,000 (மாண்டவர்)[7] |
மூடு