நுவாகோட் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
நுவாகோட் மாவட்டம் (Nuwakot District) (நேபாளி: नुवाकोट जिल्लाகேட்கⓘ, தெற்காசியாவின் நேபாள நாட்டில், மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த பாக்மதி மாநிலத்தின் 13 மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் இம்மாவட்டம், நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பிதார் நகரம் ஆகும்.
பாக்மதி மண்டலத்தில் உள்ள மலைப் பாங்கான இம்மாவட்டம் ஆகும். 1,121 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,77,471 ஆகும். இங்கு நேபாள மொழி, தமாங் மொழிகள் பேசப்படுகிறது.