தாகன்ரோக் நகரம்
From Wikipedia, the free encyclopedia
தாகன்ரோக் (ஆங்கிலம்: Taganrog) என்பது உருசியாவில், ரசுத்தோவ் மாகாணத்தில், அமைந்திருக்கும் ஒரு துறைமுக நகரம் ஆகும். அசோவ் கடலிலுள்ள தாகன்ரோக் விரிகுடாவின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. தொன் நதியின் வாயிலிருந்து பல கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 257,681 பேர் ஆகும்.