சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019
From Wikipedia, the free encyclopedia
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 (Jammu and Kashmir Reorganisation Bill, 2019), இந்தியாவின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைக்க வகை செய்யும் சட்ட முன்வடிவத்தை, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 ஆகத்து, 2019 (திங்கட்கிழமை) அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.[1][2]
விரைவான உண்மைகள் சான்று, இயற்றியது ...
சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 | |
---|---|
An Act to provide for the reorganisation of the existing State of Jammu and Kashmir and for matters connected therewith or incidental thereto. | |
சான்று | Act No. 34 of 2019 |
இயற்றியது | மாநிலங்களவை |
இயற்றியது | மக்களவை |
சம்மதிக்கப்பட்ட தேதி | ஆகத்து 9, 2019 (2019-08-09) |
கையொப்பமிடப்பட்ட தேதி | ஆகத்து 9, 2019 (2019-08-09) |
அறிமுகப்படுத்தியது | அமித் சா உள்துறை அமைச்சர் |
மூடு
சட்ட முன்வடிவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதிகளை வழங்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, 370 மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 35-எ நீக்கம் செய்யவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியாகவும் மற்றும் லடாக் லடாக் ஒன்றியப் பகுதியாகவும் பிரிக்க வகை செய்கிறது.[3]