கணையம்
From Wikipedia, the free encyclopedia
கணையம் (ஒலிப்புⓘ) (Pancreas) அல்லது சதையி அல்லது சதையம் என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்குச் சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். தென்னிலங்கையில் இது பல்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது காரட், முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு. இந்த உறுப்பானது உணவைச் செரிப்பதற்குப் பயன்படும் நொதியங்களைக் கொண்ட கணையநீரைச் சுரக்கின்றது. அத்துடன் கணையத்தில் உடலுக்கு மிகத் தேவையான சில உயிரியல் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இன்சுலின், குளூக்கொகான் (glucogon), சுரப்பி அமைப்புகளில் மட்டுப்படுத்தும் பணி செய்யும் தணிப்பியாகிய சோமட்டாசிட்டாடின் போன்ற இயக்குநீர்கள் சுரக்கின்றன. இதனால் கணையமானது நொதியங்களைக் கொண்ட குழாய்வழி சுரப்பிநீரைச் செலுத்தும் சமிபாட்டுத்தொகுதியின் ஓர் அங்கமாகவும், இயக்குநீர்களைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பிகளைக் கொண்டிருப்பதனால், அகச்சுரப்பித் தொகுதியின் ஓர் அங்கமாகவும் இயங்குகின்றது. இந்த நொதியங்கள் கார்போஹைட்ரேட்டு, புரதம், கொழுப்பியம் (lipid), குறைசெரிப்புநீர்மம் (சைம், Chyme) போன்றவற்றை பிரிக்க (சிதைவாக்க) உதவுகின்றன.
கணையம் | |
---|---|
1: கணையத்தின் முற்பகுதி 2: Uncinate process of pancreas 3: கணைய முடிச்சு 4: [[கணையத்தின் உடல்]] | |
கிரேயின் | |
தமனி | inferior pancreaticoduodenal artery, superior pancreaticoduodenal artery, splenic artery |
சிரை | pancreaticoduodenal veins, pancreatic veins |
நரம்பு | pancreatic plexus, celiac ganglia, vagus |
முன்னோடி | pancreatic buds |
ம.பா.தலைப்பு | Pancreas |