2024 இந்தியப் பொதுத் தேர்தல்
18வது மக்களவைக்கான தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
2024 இந்தியாவின் பொதுத் தேர்தல் பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் 2024 சூன் 1 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.[1] ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள இத்தேர்தலின் முடிவுகள் 2024 சூன் 4 அன்று அறிவிக்கப்படும்.
| ||||||||||||||||||||||||||||
மக்களவையின் அனைத்து 543 இடங்களுக்கும் அதிகபட்சமாக 272 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
தொகுதிகளின் வரைபடம். இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் மொத்த வாக்குப் பங்கின் விகிதாச்சாரத்தில் மொத்த இடங்கள் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக ஒவ்வொரு தொகுதியிலும் அந்த கட்சியின் வேட்பாளர் பெரும் வாக்குகளைக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. | ||||||||||||||||||||||||||||
|
ஏறத்தாழ 97 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தல் நடப்பாகும். இந்தத் தேர்தலில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குச் சாவடிகளில் 5.5 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏறத்தாழ ஒன்றரை கோடி தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடத்தையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் இந்தப் பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடத்தப்பட உள்ளது.