2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2022 Women's Cricket World Cup) பன்னிரண்டாவது மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும்.[1] ஒவ்வொரு ஆட்டமும் 50 நிறைவுகள் விளையாடும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட முறையில் விளையாடப்படுகிறது. மார்ச் 4, 2022 முதல் ஏப்ரல் 3, 2022 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் நடத்தப்பட்ட இப்போட்டிகளை நியூசிலாந்து ஏற்று நடத்தியது.[2] 2021-ல் இத்தொடர் நடைப்பெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இத்தொடர் 2022-க்கு மாற்றப்பட்டது.[3] இத்தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆத்திரேலியா அணி 7-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.[4]
விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...
நாட்கள் | 4 மார்ச் – 3 ஏப்ரல் 2022 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலைச் சுற்று, 2 அரையிறுதி மற்றும் 1 இறுதி போட்டிகள் |
நடத்துனர்(கள்) | நியூசிலாந்து |
வாகையாளர் | ஆத்திரேலியா |
இரண்டாமவர் | இங்கிலாந்து |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 31 |
தொடர் நாயகன் | அலீசா ஹீலி |
அதிக ஓட்டங்கள் | அலீசா ஹீலி (509) |
அதிக வீழ்த்தல்கள் | சோஃபி எக்கல்ஸ்டோன் (21) |
அலுவல்முறை வலைத்தளம் | Official site |
← 2017 |
மூடு