வெள்ளை இராசா
சரவாக் இராச்சியம் எனும் ஆட்சியை நிறுவிய ஒரு பிரித்தானியக் குடும்பத்தின் வம்ச முடியாட்சி / From Wikipedia, the free encyclopedia
வெள்ளை இராசா, (ஆங்கிலம்: White Rajahs; மலாய்: Raja Putih Sarawak) என்பது சரவாக் மாநிலத்தில், சரவாக் இராச்சியம் எனும் ஆட்சியை நிறுவிய ஒரு பிரித்தானியக் குடும்பத்தின் வம்ச முடியாட்சி. அதுவே ஒரு முன்னாள் மன்னராட்சி.
விரைவான உண்மைகள் வெள்ளை இராசா Rajah of Sarawak, முன்னாள் மன்னராட்சி ...
வெள்ளை இராசா Rajah of Sarawak | ||
---|---|---|
முன்னாள் மன்னராட்சி | ||
ஜேம்சு புரூக் முதல் வெள்ளை இராசா சரவாக் இராச்சியம் | ||
முதல் மன்னர் | ஜேம்சு புரூக் | |
கடைசி மன்னர் | சார்லசு வைனர் புரூக் | |
Style | மேன்மைக்கு உரிய | |
அலுவல் வசிப்பிடம் | ஆஸ்தானா சரவாக் | |
மன்னராட்சி துவங்கியது | 1841 | |
மன்னராட்சி முடிவுற்றது | 1946 |
மூடு
போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கிய வம்சாவழியினர்.
புரூணை சுல்தானகத்தில் இருந்து ஜேம்சு புரூக் (James Brooke) எனும் பிரித்தானியர் பெற்ற சில பகுதிகளைக் கொண்ட ஒரு சுதந்திர நாடாக சரவாக் இராச்சியம் உருவாக்கப்பட்டது.