வெடியூசி (சுடுகலன்)
From Wikipedia, the free encyclopedia
வெடியூசி (firing pin, ஃபையரிங் பின்) அல்லது அடிப்பான்(striker, ஸ்ட்ரைக்கர்) என்பது, சுடுகலன் அல்லது (எம்14 கண்ணிவெடி போன்ற) வெடிகளில் உள்ள, வெடிக்கும் இயக்கமுறையின் ஒரு கூறு / பாகம் ஆகும்.
(மிதிவெடிகள், எறிகணைகள், கொத்துக் குண்டுகள் மற்றும் கையெறிகுண்டுகள் முதலியன போன்ற) ஒருமுறை-உபயோக சாதனங்களுக்கான வெடித்தூண்டியில் (fuze) பயன்படுத்தப்படும் வெடியூசி, கூரான முனையுடன் இருக்கும். மாறாக, சுடுகலன்களில் உள்ள வெடியூசிகள், வெடிபொதியின் எரியூட்டியை அடிக்க ஏற்றவாறு சிறிய, வட்டமுனையுடன் வடிவமைக்கப் பட்டிருக்கும்.[1][2][3]
பொதுவாக எஃகு, அலுமினியக் கலப்புலோகம், அல்லது தைட்டானியம் ஆகியவற்றால் வெடியூசிகளும், அடிப்பான்களும் செய்யப்படும். குறைவுலோக மிதிவெடிகளைப் போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில், கண்ணாடிப் பீங்கான் போன்று உலோகமில்லா பொருட்கள் பயன்படுத்தப்படும்.