வீற்றிருக்கும் எருது
ஹங்க்பாபா லகோடா மருந்து மனிதர் மற்றும் புனித மனிதர் / From Wikipedia, the free encyclopedia
வீற்றிருக்கும் எருது (Sitting Bull, சிட்டிங் புல்) என்பது 19ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொள்கைகளை எதிர்த்துப் போராடிய புகழ்மிக்க அமெரிக்க-இந்தியத் தலைவரின் பெயர் ஆகும். இவர் சுமார் 1831இல் பிறந்தார். 1890, திசம்பர் 15ஆம் நாள் இறந்தார்.
வீற்றிருக்கும் எருது | |
---|---|
Tȟatȟaŋka Iyotȟaŋka (born Hoka Psice) | |
1882ஆம் ஆண்டில் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | c. 1831[1] கிராண்ட் ஆறு, தெற்கு டகோட்டா |
இறப்பு | (1890-12-15)திசம்பர் 15, 1890 (aged 59) கிராண்ட் ஆறு, தெற்கு டகோட்டா, Standing Rock Indian Reservation |
காரணம் of death | சுட்டுக்கொல்லப்பட்டார் |
இளைப்பாறுமிடம் | தெற்கு டகோட்டா |
துணைவர்(கள்) | வெளிர் முடி Four Robes Snow-on-Her Seen-by-her-Nation சிவப்பு பெண் |
உறவுகள் | எகாக்கா கிளெசுக்கா (half brother) வெள்ளை எருது (nephew) |
பிள்ளைகள் | ஒற்றை எருது (தத்து எடுக்கப்பட்ட மகன்) காக்கை பாதம் (மகன்) Many Horses (daughter) Walks Looking (மகள்) (தத்து எடுக்கப்பட்ட மகள்) |
பெற்றோர் | குதிக்கும் எருது (தந்தை) Her-Holy-Door (mother) |
அறியப்படுவது | Battle of Little Big Horn, resistance to USA |
கையெழுத்து | |
"வீற்றிருக்கும் எருது" என்னும் பெயர் அமெரிக்க-இந்திய மொழியாகிய லக்கோட்டாவில் Tȟatȟáŋka Íyotake என்று எழுதப்படும்.[2] அவருக்கு Slon-he ("மெதுவாகச் செல்பவர்") என்றொரு பட்டப்பெயரும் இருந்தது. அவர் அமெரிக்க-இந்திய இனமாகிய லக்கோட்டா சீயூ குலத்தின் கங்க்பாப்பா பிரிவைச் சார்ந்த சமய-அரசியல் பெருந்தலைவராகத் திகழ்ந்தார்.
வீற்றிருக்கும் எருது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் டக்கோட்டா மாகாணத்தில் பேராறு என்றழைக்கப்படும் பகுதியில் பிறந்தார். அவர் ஐக்கிய அமெரிக்க கொள்கைகளை எதிர்த்த "ஆவி நடனம்" (Ghost Dance) என்ற இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று பயந்து, அவரைக் கைதுசெய்யப் போனவிடத்தில், "அமெரிக்க-இந்திய காவல் துறை"யினர் அவரை "நிலைக்கல் இந்தியக் காப்பிடம்" என்னும் பகுதியில் சுட்டுக் கொன்றனர்.