விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்
From Wikipedia, the free encyclopedia
சுற்றுக்காவல் அல்லது சுற்றுக்காவலர் (Patrol அல்லது Patroller) அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து வரும் பயனர்களுக்கு கீழேயுள்ள அணுக்கம் பெறுவதற்கான தகுதியின்படி வழங்கலாம்.
இப்பக்கம் சுருக்கமாக: சுற்றுக்காவல் அணுக்கம் உள்ள ஒருவர் உருவாக்கும் புதிய பக்கங்கள் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகத் தாமாகவே குறிக்கப்படும். அத்தோடு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக குறிக்க முடியும். இவ்வணுக்கம் பல புதிய கட்டுரை உருவாக்கங்கள் மூலம் வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள், காப்புரிமம், மெய்யறிதன்மை, குறிப்பிடத்தக்கமை உட்பட்ட விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும். | Shortcut:
|