வாரான்
From Wikipedia, the free encyclopedia
வாரான் (Oran, அரபு மொழி: وَهران, Wahrān; பெர்பெர் மொழி: வாரென் அல்லது வெரான்) அல்சீரியாவின் வடமேற்கில் அமைந்துள்ள முதன்மைக் கடலோர நகரம். இதன் வணிக, தொழில்துறை, பண்பாட்டு முதன்மையைக் கொண்டு அல்ஜீரியாவில் தலைநகர் அல்ஜியர்சை அடுத்து இரண்டாவது முதன்மையான நகரமாக கருதப்படுகின்றது. அல்ஜியர்சிலிருந்து 432 கிமீ (268 மை) தொலைவில் உள்ளது. நகரின் மக்கள்தொகை 2008இல் 759,645 ஆக இருந்தது.[2] புறநகர்களை உள்ளடக்கிய பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை ஏறத்தாழ 1,500,000.[3] மக்கள்தொகைப்படி இது அல்ஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும்.[4]
வாரான்
Wahrān · وهران Wehran · ⵡⴻⵂⵔⴰⵏ | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): ரேடியன்ட், " الباهية " | |
ஆள்கூறுகள்: 35°41′49″N 0°37′59″W | |
நாடு | அல்ஜீரியா |
மாகாணம் | வாரான் மாகாணம் |
மாவட்டம் | வாரான் மாவட்டம் |
மீள்-நிறுவல் | AD 944 |
அரசு | |
• வாலி (ஆளுநர்) | சத்தெக் பெங்கடா |
பரப்பளவு | |
• நகரம் | 2,121 km2 (819 sq mi) |
ஏற்றம் | 0.9 m (3 ft) |
மக்கள்தொகை (2008 -நகரம், 2010 - பெருநகரம்)[1] | |
• நகரம் | 15,60,329 |
• பெருநகர் | 34,54,078 |
நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
அஞ்சல் குறியீடுகள் | 31000 - 31037 |
செவிவழிக் காதைகளின்படி பொ.யு 900 இல், இப்பகுதியில் சிங்கங்கள் வாழ்ந்திருந்ததாக கூறப்படுகின்றது. கடைசி இரண்டு சிங்கங்களை வாரான் அருகிலுள்ள மலைமீது வேட்டையாடியதாகவும் நம்பப்படுகின்றது. பிற இலக்கியங்களிலும் இவை "மலைச் சிங்கங்கள்" எனக் குறிப்பிடப்படுகின்றன.[5]