வளர்ப்பு வல்லூறு
வேட்டை பயன்பாட்டுக்காக வளர்க்கப்படும் பருந்து / From Wikipedia, the free encyclopedia
வளர்ப்பு வல்லுறு (Falconry) என்பது வன விலங்குகளை அதன் இயற்கை வாழிடங்களில் வேட்டையாட பயிற்றுவிக்கப்பட்ட கொன்றுண்ணிப் பறவை ஆகும். தற்காலத்தில் வளர்ப்பு வல்லுறுகளாக செவ்வால் பாறு (Buteo jamaicensis), ஹாரிஸ் பாறு (Parabuteo unicinctus), பொரி வல்லூறு (Falco perigrinus) போன்ற பறவைகள் வளர்க்கப்படுகின்றன.
துவக்கக்கால ஆங்கில புனைகதை இலக்கியங்களில் "ஃபால்கோன்" (falcon) என்ற சொல்லானது பெண் வல்லுறுவை மட்டுமே குறிக்கப் பயன்பட்டது. அதே நேரத்தில் "ஹாக்" (hawk அல்லது hawke) அல்லது "ஹாக்" என்ற சொல்லும் ஒரு பெண் பாறுவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. ஆண் ஹாக் (பாறு) அல்லது ஃபால்கோன் (வல்லூறு) ஆகியவற்றைக் குறிக்க "tiercel" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஏனென்றால் ஆண் பறவை பெண் பறவையின் அளவில் சுமார் மூன்றில் ஒரு பங்கே இருந்தது.[1][2]