வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு
சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation; BIMSTEC), தெற்கு ஆசியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் அமைந்துள்ள ஏழு நாடுகள் அடங்கிய ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இந்நாடுகளின் கூட்டு மக்கள் தொகை 1.5 மில்லியன், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 டிரில்லியன் டாலராகும் (2018).[3] இந்நிறுவனத்தின் உறுப்பினா் நாடுகள் வங்காள தேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேப்பாளம், பூட்டான் ஆகும். இவைகள் அனைத்தும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகள் ஆகும்[4].
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பு
| |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தலைமைச் செயலகம் | டாக்கா, வங்காள தேசம்[1] | ||||||||||||
அங்கத்துவம் | |||||||||||||
தலைவர்கள் | |||||||||||||
• Chairmanship | இலங்கை (since September 2018)[2] | ||||||||||||
உருவாக்கம் | 6 சூன் 1997; 26 ஆண்டுகள் முன்னர் (1997-06-06) | ||||||||||||
14 முன்னுரிமைத் துறைகள் இனங்காணப்பட்டு, இவைகளில் தொடா்ந்து நடவடிக்கை எடுக்க பல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன[3][5]. இவைகளுள் வரியில்லா வா்த்தக உடன்பாடு செய்து கொள்ள பேச்சு வாா்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது (2018). இந்நாடுகளில் தலைமை வகிக்கும் பொறுப்பு அகர வரிசையில் சுற்றிவரும். இதன் நிரந்தர செயலகம் டாக்காவில் அமைந்துள்ளது.