வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்
வங்காளதேசத்தில் செயல்படும் அரசியல் மற்றும் இலாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனம் / From Wikipedia, the free encyclopedia
வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம் (Asiatic Society of Bangladesh) என்பது 1864 ஆம் ஆண்டின் சங்கங்களின் சட்டம் மற்றும் வங்காள தேச அரசாங்கத்தின் அரசு சாரா அமைப்பு விவகார பணியகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு அரசியல் மற்றும் இலாப நோக்கற்ற ஆராய்ச்சி அமைப்பாகும். [2] இச்சமூகம் பல முஸ்லிம் தலைவர்களால் 1952 இல் டாக்காவில் கிழக்கு பாக்கித்தானின் ஆசியச் சமூகமாக நிறுவப்பட்டது. பின்னர், 1972 இல் மறுபெயரிடப்பட்டது. பாக்கித்தானின் புகழ்பெற்ற இசுலாமிய வரலாற்றாசிரியரும், தொலியல் ஆய்வாளருமான அகமது அசன் தானி இந்த சமூகத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு வங்காள மொழியியலாளர் முகமது சாகிதுல்லா உதவி செய்தார். பழைய டாக்காவில் உள்ள டாக்கா பல்கலைக்கழகத்தின் கர்சன் மாளிகையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நிம்தாலியில் இந்த சமூகத்தின் அலுவலகம் உள்ளது. [3]
வங்காளதேசத்தின் டாக்காவிலுள்ள, நிம்தாலியில் உள்ள ஆசியச் சமூகத்தின் தலைமையகம் | |
உருவாக்கம் | 1952; 72 ஆண்டுகளுக்கு முன்னர் (1952) |
---|---|
தலைமையகம் |
|
ஆள்கூறுகள் | 23.724076°N 90.402586°E / 23.724076; 90.402586 |
தலைவர் | மக்பூசா கானம்[1] |
வலைத்தளம் | www |