லபுவான்
மலேசிய நிலப்பரப்பு / From Wikipedia, the free encyclopedia
லபுவான் (Labuan, /ləˈbuːən/ (ஜாவி: لابوان), அதிகாரபூர்வமாக லபுவான் கூட்டாட்சிப் பகுதி (Federal Territory of Labuan) என்பது மலேசியாவின் ஒரு கூட்டாட்சி மண்டலம் ஆகும். இது கிழக்கு மலேசியாவில் சபா மாநிலத்தில் அமைந்துள்ள லபுவான் தீவையும் ஆறு சிறிய தீவுகளையும் கொண்டது. இதன் தலைநகரம் விக்டோரியா ஆகும்.
விரைவான உண்மைகள் லபுவான்Labuan, நாடு ...
லபுவான் Labuan | |
---|---|
லபுவான் கூட்டாட்சிப் பகுதி Federal Territory of Labuan Wilayah Persekutuan Labuan ولايه ڤرسكوتوان لابوان 纳闽联邦直辖区 | |
குறிக்கோளுரை: Maju dan Sejahtera (வளர்ந்த மற்றும் வளமான) | |
ஆள்கூறுகள்: 5°19′13.16″N 115°12′40.42″E | |
நாடு | மலேசியா |
தலைநகர் | விக்டோரியா[1] |
அரசு | |
• நிருவாகம் | லபுவான் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 92 km2 (36 sq mi) |
மக்கள்தொகை (2019)[4] | |
• மொத்தம் | 99,300 |
• அடர்த்தி | 1,100/km2 (2,800/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (மநே) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (இல்லை) |
Area code | 087 |
வாகனப் பதிவு | L SL |
இணையதளம் | pl |
மூடு
1990 முதல் விக்டோரியா நகரம் பன்னாட்டு நிதி மற்றும் வணிக சேவைகளை வழங்கும் கடல் வணிக மையமாகவும், ஆழ்கடல் எண்ணெய் மற்றும் மற்றும் எரிவாயு நடவடிக்கைகளுக்கான மையமாகவும் அறியப்படுகிறது. அத்துடன் சுற்றுலா மையமாகவும் விளங்குகின்றது. லபுவான் என்ற பெயர் மலாய் மொழியில் துறைமுகத்தைக் குறிக்கும் "லபுகான்" என்னும் சொல்லில் இருந்து பிறந்தது.[5]