ரூர்
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை செருமனியின் ரூர் பெருநகர் பகுதி பற்றியது. இதே பெயருள்ள ஆற்றினைக் குறித்தறிய, ரூர் ஆறு என்பதைப் பாருங்கள்.
ரூர் பகுதி (Ruhr Area, செருமனி:Ruhrgebiet) செருமனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) பகுதியில் உள்ள ஓர் மாநகரத் தொகுதியாகும். இந்தப் பகுதியில் உள்ள மாநகரங்கள் கனரக தொழிலகங்களுக்குப் பெயர்பெற்றவை. இதன் தெற்கே ரூர் ஆறும் மேற்கே ரைன் ஆறும் வடக்கே லிப் ஆறும் ஓடுகின்றன.தென்மேற்கே பெர்கிசஸ்லாந்து எல்லையாக உள்ளது.
விரைவான உண்மைகள் ரூர் பெருநகர் வலயம் Metropolregion Ruhr, நாடு ...
ரூர் பெருநகர் வலயம்
Metropolregion Ruhr | |
---|---|
செருமனியில் ரூர் பகுதியின் அமைவிடம் | |
நாடு | செருமனி |
மாநிலம் | வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா
|
மிகப்பெரும் நகரங்கள் | டோர்ட்முண்ட் எசன் டுயிஸ்பெர்க் போ கும் |
அரசு | |
• நிர்வாகம் | ரீஜினல்வெர்பாண்ட் ரூர் |
பரப்பளவு | |
• மாநகரம் | 4,435 km2 (1,712 sq mi) |
உயர் புள்ளி | 441 m (1,447 ft) |
தாழ் புள்ளி | 13 m (43 ft) |
மக்கள்தொகை | |
• பெருநகர் | 51,72,745 |
• பெருநகர் அடர்த்தி | 1,646/km2 (4,260/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
மொத்த வலய உற்பத்தி | 2007 |
Nominal | € 136.3 பில்லியன்[1] |
இணையதளம் | www.metropoleruhr.de |
மூடு
ஏறத்தாழ 5.3 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தப் பகுதி 12 மில்லியன் வசிக்கும் ரைன்-ரூர் பெருநகர் பகுதியின் அங்கமாகும். ஐரோப்பாவில் மாஸ்கோ, இலண்டன், பாரிசை அடுத்து நான்காவது பெரும் நகர்ப்பகுதியாக விளங்குகிறது.