ரிச்சர்ட் ஸ்டால்மன்
From Wikipedia, the free encyclopedia
ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் (Richard Matthew Stallman, பி. மார்ச் 16, 1953) என்பவர் கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free software movement), குனூ திட்டம் (GNU Project), கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Foundation), நிரலாக்க தளையறுப்பு லீக் (League for Programming Freedom) போன்றவற்றின் தோற்றுவிப்பாளராவார்.
ரிச்சர்ட் ஸ்டால்மன் Richard Matthew Stallman | |
---|---|
பிறப்பு | 16 மார்ச்சு 1953 (அகவை 71) மன்ஹாட்டன் |
படிப்பு | அறிவியல் முனைவர் |
படித்த இடங்கள் |
|
பணி | நிரலாளர், வலைப்பதிவர், புத்தாக்குனர் |
விருதுகள் | Grace Murray Hopper Award, இணையப் புகழ்மண்டபம், ACM Software System Award, Honorary doctoral degree of the Pierre and Marie Curie University, honorary doctorate of the Vrije Universiteit Brussel |
இணையம் | https://stallman.org/ |
கையெழுத்து | |
இவர் ஒரு சிறந்த நிரலாளருமாவார். இவரது சிறந்த மென்பொருட் படைப்புக்களாக ஈமாக்ஸ் (Emacs. பின்னாளில் GNU Emacs), GNU C Compiler, GNU வழுத்திருத்தி போன்றவை கருதப்படுகின்றன.
குனூ பொதுமக்கள் உரிமத்தின் ஆக்கியோரும் இவரே.
தொண்ணூறுகளிலிருந்து தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளிலும், கட்டற்ற மென்பொருள் தத்துவ ஆக்கம், பரவலாக்கம் , ஆலோசனை வழங்கல் போன்ற விடயங்களிலும் தன்னுடைய பெரும்பகுதி நேரத்தினைச் செலவிட்டு வருகிறார். இவர் உரையாற்றுவதற்காக வழங்கப்படும் பணமே இவரது சொந்த வருமானமாக இருக்கிறது.