ராயல் டச்சு ஷெல்
From Wikipedia, the free encyclopedia
ராயல் டச்சு ஷெல் (Royal Dutch Shell) என்பது ஒரு பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவளி நிறுவனமாகும்.[2] இது நெதர்லாந்தின் ஹேகு நகரில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு மாபெரும் எண்ணெய் நிறுவனம். பொதுவாக ஷெல் என்னும் சுருக்கப் பெயரிலேயே அறியப்படும்.
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
தலைமையகம் லண்டன், ஐக்கிய இராச்சியம் | |
வகை | பங்குச் சந்தை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | பெப்ரவரி 1907; 117 ஆண்டுகளுக்கு முன்னர் (1907-02) |
நிறுவனர்(கள்) | மார்கஸ் சாமுவேல்& ஜான்கீர் ஜான் ஹியூகோ லாடன் |
தலைமையகம் | டென் ஹாக், நெதர்லாந்து (தலைமையகம்) ஷெல் மையம், லண்டன், ஐக்கிய அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | பென் வான் பெர்டன்(தலைமை நிர்வாக அதிகாரி) சார்லஸ் ஹாலிடே(தலைவர்) |
தொழில்துறை | எண்ணெய் & எரிவாயு |
உற்பத்திகள் | பெட்ரோலியம், இயற்கை எரிவாயு |
வருமானம் | US$ 261.5 billion (2021)[1] |
இயக்க வருமானம் | US$ 33.4 பில்லியன் (2021)[1] |
இலாபம் | US$ 20.6 பில்லியன் (2021)[1] |
மொத்தச் சொத்துகள் | US$ 404.4 பில்லியன் (2021)[1] |
மொத்த பங்குத்தொகை | US$ 175.3 பில்லியன் (2021)[1] |
பணியாளர் | 86,000 (2021)[1] |
துணை நிறுவனங்கள் | பட்டியல்
|
இணையத்தளம் | Shell.com |
மூடு
1907ஆம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த ராயல் டச்சு பெட்ரோலியம் கம்பெனியும், பிரித்தானிய ஷெல் நிறுவனமும் இணைந்து ராயல் டச்சு ஷெல் குழுமத்தை உருவாக்கியது. அப்போது உலக அளவில் பெரிய நிறுவனமாக இருந்த ஜான் டி. ராக்கபெல்லரின் ஸ்டேண்டர்டு ஆயில் நிறுவனத்தோடு போட்டியிட இவ்விணைப்பினை மேற்கொண்டன. இணைந்த நிறுவனத்தின் 60% உரிமையை டச்சுப் பகுதியும், மீதி 40% உரிமையை பிரித்தானிய பகுதியும் எடுத்துக் கொண்டன.