ராக்கி மலைத்தொடர்
வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலுள்ள ஒரு மலைத்தொடர் / From Wikipedia, the free encyclopedia
ராக்கி மலைத்தொடர் (Rocky Mountains) பொதுவாக ராக்கீசு என்று அழைக்கப்படுகிறது. இம் மலைத்தொடர் வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஓர் பெரும் மலைத்தொடர் ஆகும். கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தின் வடக்கில் தொடங்கி ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம் வரை 3,000 மைல்களுக்கு (4,300 கிமீ) நீண்டுள்ளது. சில இடங்களில் இதன் அகலம் 300 மைல்களுக்கும் அதிகம். அலாசுக்கா, கனடாவிலுள்ள புரூக் மலைத்தொடர் இதன் நீட்சியாகவும் பார்க்கப்படுகிறது. கொலராடோ மாநிலத்திலுள்ள 14,433 அடி உயரமுடைய எல்பர்ட் மலை ராக்கி மலைத்தொடரின் மிக உயரமான மலையாகும்.[1] இன்று இம்மலைத்தொடர் பூங்காக்களாவும் மிகப்பெரிய பொழுதுபோக்கு சுற்றுலா தலங்களாகவும் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மலையேற்றம், பனிச்சறுக்கு, மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய மலைத்தொடர் இதுவாகும். வட அமெரிக்க மலையடுக்குத் தொடருக்குள் ராக்கீசு மலைத்தொடர், பசிபிக் கரையோரப் பகுதிகள் மற்றும் காசுகேட் தொடர் மற்றும் சியரா நெவாடா ஆகிய மலைத் தொடர்களிலிருந்து சற்று வித்தியாசமாக சற்று வேறுபட்டு காணப்படுகிறது. இவை அனைத்தும் மேலும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன.
ராக்கி மலைத்தொடர் | |
ராக்கீசு | |
Mountain range | |
கனடாவின் ஆல்பர்ட்டா மாநிலத்தின் பான்ஃப் தேசியப் பூங்காவில் மொரெய்ன் ஆறும் பத்து சிகரங்களின் பள்ளத்தாக்கும் | |
நாடுகள் | கனடா, ஐக்கிய அமெரிக்கா |
---|---|
பகுதிகள் | பிரிட்டிசு கொலம்பியா, ஆல்பர்ட்டா, யடகோ, மொன்டானா, வயோமிங், யூட்டா, கொலராடோ, நியூ மெக்சிகோ |
பகுதி | பசிபிக் பெரும் மலைத்தொடர் |
மிகவுயர் புள்ளி | எல்பர்ட் மலை |
- உயர்வு | 14,440 அடி (4,401 மீ) |
- ஆள்கூறுகள் | 39°07′03.90″N 106°26′43.29″W |
Geology | தீப்பாறை, படிவுப்பாறை, |
Period | கேம்பிரியாவுக்கு முந்தைய பாறை, களிமண்ணாய காலம் |
|
சுமார் 55-80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு லாராமைடு மலையாக்கச் செயல்முறையில் ராக்கி மலைத்தொடர் உருவாகியிருக்கலாம். இக்காலத்தில் வட அமெரிக்க நில பலகையின் மீது பசிபிக் நிலப்பலகை மோதி ஏற்பட்ட விளைவால் வட அமெரிக்க கண்டத்தில் பல மலைத்தொடர்கள் உருவாகின, இதில் முதன்மையானதும் நீளமானதும் ராக்கி மலைத்தொடர் ஆகும். பசிபிக் பலகை குறைவான ஆழத்தில் வட அமெரிக்க பலகைக்கு கீழ் பல ஆண்டுகளாக சென்றதால் ராக்கி மலைத்தொடர் ஏற்பட்டது, அதனாலாயே கடற்கரைக்கு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கொலராடோ மாநிலத்தில் இம்மலைத்தொடர் உள்ளது. பனியாறுகள் மூலமும் நிலத்தில் ஏற்பட்ட பல்வேறு விசைகள் மூலமும் ஏற்பட்ட அரிப்பால் பாறைகள் உருமாறி பல்வேறு முகடுகளும் வடிவங்களும் தோன்றின. பனிக்காலத்தின் முடிவில் மாந்தர்கள் இப்பகுதியில் வாழ ஆரம்பித்தார்கள். அலெக்சாண்டர் மெக்கன்சி, போன்ற ஐரோப்பியர்களாலும், இலூயிசு மற்றும் கிளார்க் போன்ற அமெரிக்கர்களாலும் இம்மலைத் தொடரில் தனிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இருப்பினும் நிறைய மாந்தர்கள் இங்கு குடியேறாததால் இது மக்கள் அடர்த்தி குறைந்த இடமாகவே உள்ளது.
மலைப்பகுதிகளில் பெரும்பாலானவை பொது பூங்காக்கள் மற்றும் வன நிலங்களால் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் ராக்கி மலைத்தொடர் உள்ளது, குறிப்பாக நடைபயணம், முகாம், மலையேறுதல், மீன்பிடித்தல், வேட்டை, மலையேற்றம், பனிச்சறுக்கு போன்ற நடவடிக்கைகள் இதற்கு உதவுகின்றன.