ரசுவா மாவட்டம்
நேபாளத்தின் பாக்மதி மாகாணத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ரசுவா மாவட்டம் (Rasuwa District) (நேபாளி: रसुवा जिल्लाகேட்கⓘ, தெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ள பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் துன்சே நகரம் ஆகும். துன்சே நகரம், காட்மாண்டு நகரத்திலிருந்து நூற்றி இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இம்மாவட்டம் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். பாக்மதி மண்டலத்தில் அமைந்த ரசுவா மாவட்டத்தின் பரப்பளவு 1,544 ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 43,300 ஆகும். இம்மாவட்டம் 9,778 குடியிருப்பு வீடுகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் நேபாள மொழி மற்றும் தமாங் மொழிகள் பேசப்படுகிறது. மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் இமயமலையில் அமைந்த பதினாறு மாவட்டங்களில் சிராஹா மாவட்டம் மிகவும் சிறியதாகும். இமாவட்டத்தின் வடக்கு எல்லையாக திபெத் தன்னாட்சிப் பகுதி அமைந்துள்ளது.
ஒன்பது தொகுதிகளைக் கொண்ட 18 கிராமிய நகராட்சிகள் இம்மாவட்டத்தில் உள்ளது. நெடுஞ்சாலை எண் 21, இம்மாவட்டத் தலைமையிடமான துன்சே நகரத்தை சாலை வழியாக காட்மாண்டு நகரத்துடன் இணைக்கிறது.