மைக்கலாஞ்சலோ
From Wikipedia, the free encyclopedia
மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும், கட்டடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.
மைக்கலாஞ்சலோ Michelangelo | |||||
---|---|---|---|---|---|
மைக்கலாஞ்சலோவின் உருவப்படம், ஜசொப்பீனோ டெல் கொன்டே வரைந்தது (1535 இற்குப் பின்னர்) 60 வயதில் | |||||
பிறப்பு | Michelangelo di Lodovico Buonarroti Simoni (1475-03-06)6 மார்ச்சு 1475 காப்பிரசே, இத்தாலி) | ||||
இறப்பு | 18 பெப்ரவரி 1564(1564-02-18) (அகவை 88) ரோம், இத்தாலி | ||||
தேசியம் | இத்தாலியர் | ||||
கல்வி | டொமெனிக்கோ கிர்லண்டையோ இடம் பயிற்சி[1] | ||||
அறியப்படுவது | சிற்பக்கலை, ஓவியம், கட்டடக்கலை, கவிதை | ||||
குறிப்பிடத்தக்க படைப்புகள் | டேவிட், ஆதாமின் உருவாக்கம், பியேட்டா | ||||
|
மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.
மைக்கலாஞ்சலோவின் புகழ் பெற்ற படைப்புகளான, பியேட்டா (Pietà), டேவிட் ஆகியவை 16ஆம் நூற்றாண்டின் இருபதுகளின் பிற்பகுதியிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் உருவாக்கப்பட்டவை. ஒவியம் தொடர்பாக இவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதபோதும், மேற்கத்திய ஓவியக் கலைத் துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இரண்டு ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார். இவை ரோம் நகரிலுள்ள சிசுடைன் சிற்றாலய உட்கூரையிலும் அதன் பீடத்தின் பின்னுள்ள சுவரில் வரையப்பட்டுள்ள கடைசித் தீர்ப்பு ஓவியங்களாகும். இவருடைய வாழ்வின் பிற்பகுதியில் வத்திக்கானின் புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடத்தை (dome) வடிவமைத்தார்.
இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது இரண்டு வாழ்க்கை வரலாறுகள் வெளியிடப்பட்டது. இவற்றில் ஒன்றை எழுதிய ஜோர்ஜியோ வசாரி (Giorgio Vasari), இவரை, மறுமலர்ச்சிக் காலச் சாதனைகள் அனைத்துக்கும் சிகரம் போன்றவர் எனப் புகழ்ந்துள்ளார். இக்கருத்து, பின்வந்த நூற்றாண்டுகளில், கலைத்துறையில் ஆமோதிக்கப்பட்டது.