மேற்றோல்
தோலின் வெளிப்புற படை / From Wikipedia, the free encyclopedia
மேற்றோல் அல்லது மேற்தோல் (epidermis) எனப்படுவது மனித தோலின் வெளியே உள்ள படையில் காணப்படும் உயிரணுக்கலால் உருவாக்கப்பட்டதொன்றாகும்.[1]
விரைவான உண்மைகள் மேற்றோல் Epidermis, விளக்கங்கள் ...
மேற்றோல் Epidermis | |
---|---|
வெள்ளைப் பட்டியில் பிரிக்கப்பட்ட மேற்தோல் திசுவியல் படம் | |
மேற்தோலிற்குரிய அடுக்குகளை விவரிக்கும் திசுவியல் படம். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Epidermis |
MeSH | D004817 |
TA98 | A16.0.00.009 |
TA2 | 7046 |
TH | TH {{{2}}}.html HH3.12.00.1.01001 .{{{2}}}.{{{3}}} |
FMA | 70596 |
உடற்கூற்றியல் |
மூடு
மேற்றோல் ஆனது செதில்கலாளான வரிகொண்ட புறத்தோலாகும் . இவை பெருகும் மற்றும் பெருகா கொம்புறுக்கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இதுவே உடலை பல்வேறுபட்ட எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் பிரதான தடுப்பு வேலி ஆகும். இது தொற்று நோய்க்காரணிகளை உடலினுள் செல்லவிடாது தடுக்கிறது. மேலும் நீரிழப்பின் மூலம் உடலிலிருந்து வெளியேறும் நீரின் அளவையும் சீராக்குகிறது.
மனித உடலின் மிகவும் மெல்லிய மேற்றோல் கண் இமையிலும் (0.05 mm/0.020 in) மிகவும் தடித்த மேற்றோல் உள்ளங்கை மற்றும் உள்ளங்காலிலும் (1.5mm/0.059 in) காணப்படுகிறது