மெண்டோசா, அர்கெந்தீனா
அர்கெந்தீனாவிலுள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
மெண்டோசா (Mendoza ), அதிகாரப்பூர்வமாக மெண்டோசா நகரம் , அர்கெந்தீனாவில் உள்ள மெண்டோசா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது மாகாணத்தின் வடக்கு-மத்திய பகுதியில், ஆந்திசு மலையின் கிழக்குப் பகுதியில், மலையின் அடிவாரத்திலும் உயர் சமவெளிப் பகுதியில் அமைந்துள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெருநகர மெண்டோசாவில் 115,041 என்ற அளவில் மக்கள்தொகை இருந்தது. இது நாட்டின் நான்காவது பெரிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பெருநகரப் பகுதியாகும்.
மெண்டோசா
Huentota | |
---|---|
மெண்டோசா நகரம் | |
அர்கெந்தீனாவில் மெண்டோசாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 32°53′S 68°49′W | |
நாடு | அர்கெந்தீனா |
மாகாணம் | மெண்டோசா |
துறை | கேப்பிடல் |
Settled | 1561; 463 ஆண்டுகளுக்கு முன்னர் (1561) |
தோற்றுவித்தவர் | பெட்ரோ தெல் காசுட்டிலோ |
அரசு | |
• நகரத்தந்தை | உல்பியானோ சுவாரசு |
பரப்பளவு | |
• மாநகரம் | 54 km2 (21 sq mi) |
ஏற்றம் | 746.5 m (2,449.1 ft) |
மக்கள்தொகை (2010 மக்கள்தொகை கணக்கெடுப்புபடி) | |
• அடர்த்தி | 2,055.4/km2 (5,323/sq mi) |
• நகர்ப்புறம் | 1,15,041 |
• பெருநகர் | 10,33,000 (2,021 est.)[1] |
• மக்கள் குழு | மெண்டோசியர்கள் |
நேர வலயம் | ஒசநே-3 (அர்கெந்தீனாவின் நேர வலயம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | எம் 5500 |
Area code | +தொலைபேசி இணைப்பு எண் 261 |
காலநிலை | கோப்பென் |
இணையதளம் | ciudaddemendoza.gov.ar |
Ruta Nacional 7, புவெனஸ் ஐரிஸ் மற்றும் சான்டியாகோ இடையே செல்லும் முக்கிய சாலை, மெண்டோசா வழியாக செல்கிறது. அக்கோன்காகுவா (மேற்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களில் உள்ள மிக உயரமான மலை) மற்றும் மலையேறுதல், நடைப் பிரயாணம், குதிரையேற்றம், படகு விளையாட்டு மற்றும் பிற விளையாட்டுகளில் ஆர்வமுள்ள சாகசப் பயணிகளுக்கு இந்த நகரம் மிகவும் பிடித்தமான இடமாகும். குளிர்காலத்தில், சறுக்கு வீரர்கள் ஆந்திசை எளிதாக அணுக நகரத்திற்கு வருகிறார்கள்.
இடலை எண்ணெய் உற்பத்தி மற்றும் அர்கெந்தீனா வைன் ஆகிய இரண்டும் மெண்டோசா பகுதியின் இரண்டு முக்கிய தொழில்கள் ஆகும். பெருநகர மெண்டோசாவைச் சுற்றியுள்ள பகுதி தென் அமெரிக்காவின் மிகப்பெரிய வைன் உற்பத்தி செய்யும் பகுதியாகும். எனவே, மெண்டோசா பதினொரு பெரிய வைன் தலைநகரங்களில் ஒன்றாகும்.[2] மேலும் இந்த நகரம் வளர்ந்து வரும் சுற்றுலாத் தளமாகவும், அர்கெந்தீனா வைன் பாதையில் அமைந்துள்ள பிராந்தியத்தின் நூற்றுக்கணக்கான வைன் ஆலைகளை ஆராய்வதற்கான தளமாகவும் உள்ளது.