மீப்பெரும் குழல்கள்
From Wikipedia, the free encyclopedia
மீப்பெரும் குழல்கள் (Great vessels) என இதயத்திலிருந்து குருதியை வெளிக்கொணரும் அல்லது கொண்டு செல்லும் பெரிய குருதிக் குழல்கள் குறிப்பிடப்படுகின்றன.[1] இவையாவன:[1][2][3]
- மேற் பெருஞ் சிரை
- கீழ்ப் பெருஞ் சிரை
- நுரையீரல் தமனிகள்
- நுரையீரல் சிரைகள்
- பெருந்தமனி
மீப்பெரும் குழல்களின் இடமாற்றம் பிறவிசார் இதயக் குறைபாடுகளில் ஓர் குழுமமாகும்; இக்குறைபாடுகளில் இந்த மீப்பெரும் குழல்களில் ஏதேனும் ஒன்று தன்னுடைய வழமையான இடத்தில் இல்லாது மாற்றிடத்தில் அமைந்திருக்கும்.[4]