மின்னழுத்தமானி
From Wikipedia, the free encyclopedia
மின்னழுத்தமானி (Voltmeter) என்பது ஒரு மின்சுற்றில் உள்ள இரண்டு புள்ளிகளுக்கிடையில் காணப்படும் மின்னழுத்த வேறுபாடுகளை அளக்கும் கருவியாகும். ஒப்புமை மின்னழுத்தமானிகள் மின் சுற்றில் அறியப்படும் மின்னழுத்தத்திற்கு ஏற்றாற்ப் போல் ஒரு முள்ளை வரையறுக்கப்பட்ட ஒப்பளவின் மீது நகர்த்தும். எண்முறை மின்னழுத்தமானிகளில் ஓர் ஒப்பிலக்க மாற்றி இருக்கும். அதன் பயனால் மின்னழுத்தத்தை எண்களாக காட்சிப்படுத்தும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒரு மின்சுற்று வரைப்படத்தில் மின்னழுத்தமானியானது ஒரு வட்டத்தினுள் V என்ற எழுத்தினால் குறிப்பிடப்படும்.
மின்னழுத்தமானியைப் பல வடிவங்களில் உருவாக்குகின்றனர். மின்னழுத்தத்தைக் கண்காணிக்க மின்னியற்றிகளில் நிரந்தரமாக மின்னழுத்தமானிகள் பொருத்தப்படுகின்றன. பொதுவாக மின்னியல் மற்றும் இலத்திரனியல் வேலைகளில் பல்பயன் அளவி போன்ற கையடக்க மானிகளைத் தான் பயன்படுத்துவார்கள். பல்பயன் அளவி பயன்படுத்த எளிதாகவும், கையடக்கமாகவும் இருப்பதினால் இது வழக்கமான சோதனைக் கருவியாக தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாறியது . எந்த ஒரு அளவையையும் மின்னழுத்தமாக மாற்றி, அதனை முன்னரே அளவுத்திருத்தம் செய்யப்பட்ட மீட்டர்களில் அளவீடலாம், உதாரணமாக, இரசாயன தொழிற்சாலைகளில் உள்ள செயல்முறை நிலைகள் மற்றும் அளவுகளான அழுத்தம், வெப்பம், மட்டம், ஓட்டம் போன்றவற்றை மின்னழுத்தமாக மாற்றி தகுந்தபடியாக கண்காணிக்க முடிகிறது.
பொதுப்பயன்பாட்டு ஒப்புமை மின்னழுத்தமானிகளின் ஒப்பளவில் சில விழுக்காடு பிழையின்மை உண்டாகலாம். அவை ஒரு வோல்ட்டு முதல் சில ஆயிரம் வோல்ட்டுகள் அளவிட பயன்படும். எண்முறை மின்னழுத்தமானிகளில் பிழையின்மை அதிகமாக 1 % மேல்வரை கொண்டதாக இருக்கும் அலை பெருக்கிகள் கொண்ட எண்முறை காட்சிமதிப்பினில் நுண்ணிய வோல்ட்டு வேறுபாடுகளையும் கண்டறிய இயலும் .
பிழையற்ற அல்லது பிழைகுறைந்த மின்னழுத்தமானிகள் உருவாக்கும் பொழுது செயல் படுத்தும் அளவுத்திருத்தங்கள் அதன் பிழையின்மையை சரிபார்க்க துணை நிற்கிறது. ஆய்வகங்களில், துல்லியமான பயன்பாட்டுக்கு வெஸ்டன் மின்கலம் தான் பயன்படுத்துவர். மின்சுற்றுகளில் துல்லிய வோல்ட்டு குறிப்புகள் பொறிக்கப்பட்டிருக்கும்.