மலாக்கா மாநிலத்தின் சின்னம்
From Wikipedia, the free encyclopedia
மலாக்கா மாநிலத்தின் சின்னம் (ஆங்கிலம்: Coat of arms of Malacca) என்பது மலாக்கா மாநிலத்தின் அதிகாரப்பூர்வமான சின்னம் ஆகும். 1946-ஆம் ஆண்டு, பிரித்தானிய காலனித்துவ காலத்தில் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் எனும் அமைப்புடன்; நீரிணை குடியேற்ற மாநிலமான மலாக்கா மாநிலம் இணைந்த போது இந்த மாநிலச் சின்னம் அறிமுகமானது. இந்தச் சின்னம் ஐரோப்பிய எரால்டிக் வடிவமைப்புகளை (Heraldic Designs) சார்ந்தது.
மலாக்கா மாநிலத்தின் சின்னம் Coat of arms of Malacca | |
---|---|
விவரங்கள் | |
பயன்படுத்துவோர் | மலாக்கா |
உள்வாங்கப்பட்டது | 1963 - 1965 |
முடி | பிறை; தாரகை |
விருதுமுகம் | அர்கெண்ட், மலாக்கா மரம்; ஐந்து கிரிஸ் கத்திகள் |
ஆதரவு | இரு சருகு மான்கள் |
குறிக்கோளுரை | ஒன்றுபட்டு நிற்போம் (Bersatu Teguh) (United We Stand) (برساتو تڬوه) |
சின்னத்தில் உள்ள சிவப்பு, வெள்ளை, மஞ்சள், நீலம் ஆகிய நான்கு வண்ணங்கள்; மலாக்கா மலேசியாவின் ஒரு பகுதியாக இருப்பதைக் குறிக்கிறது. சிகரத்தில் உள்ள நட்சத்திரம் மற்றும் பிறை, மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மதமான இசுலாம் என்பதைக் குறிக்கிறது. ஐந்து கிரிஸ் கத்திகள் பண்டைய மலாக்கா சுல்தானகத்தில் புகழ்பெற்ற ஆங் துவா, ஆங் ஜெபாட், ஆங் கஸ்தூரி, ஆங் லெக்கிர், ஆங் லெக்கியூ எனும் ஐந்து போர்வீரர்களைக் குறிக்கின்றன.